இன்று மேற்கு வங்க அரசு ஆகஸ்ட் 28, 2020 வெள்ளிக்கிழமை மாநிலம் முழுவதும் கொரோனா ஊரடங்கை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
ஆகஸ்ட் 20, ஆகஸ்ட் 21, ஆகஸ்ட் 27 மற்றும் ஆகஸ்ட் 31 ஆகிய தேதிகளில் முழுமையான ஊரடங்கு அறிவித்த நிலையில்,.மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு முந்தைய ஊரடங்கின் தேதிகளையும் திருத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 3 ம் தேதி,பல்வேறு பகுதிகளிலிருந்து "பல கோரிக்கைகள் மற்றும் முறையீடுகள்" அடிப்படையில் பொதுமுடக்கத்திற்க்கான திருத்தப்பட்ட பட்டியலை அரசாங்கம் அறிவித்தது.
ஆகஸ்ட் 11 ம் தேதி, வங்காளத்தின் கோவிட் -19 எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி 1,01,390 ஐ எட்டியுள்ளது.இதில் 2,149 பேர் இறந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது.