சென்னை, நவ. 1- விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்த லில் வெற்றிபெற்ற அதிமுக உறுப்பினர்கள் முத் தமிழ்ச்செல்வன், நாராய ணன் ஆகியோர் சட்டப் பேரவை உறுப்பினர்களாக வெள்ளிக்கிழமை (நவ.1) பதவியேற்றுக்கொண்டனர். இருவருக்கும் சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் பி.தன பால் பதவியேற்பு உறுதி மொழியை செய்து வைத் தார். பேரவைத் தலைவரின் அறையில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது. எம்எல்ஏக்கள் பதவி யேற்பு விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். எம்எல்ஏக்கள் இரண்டு பேர் பதவியேற்றதன் மூலம், சட்டப்பேரவையில் அதிமுக வின் பலம் 124 ஆக உயர்ந் துள்ளது. முன்னதாக முதல மைச்சர் துணை முதல மைச்சர், அமைச்சர்கள் ஆகி யோர் வெற்றிபெற்ற இரண்டு எம்எல்ஏக்களுடன் ஜெயலலிதா சமாதியில் மரி யாதை செலுத்தினர்.