tamilnadu

img

காய்கறி விவசாயி மயங்கி விழுந்து மரணம்

வேலூர், ஏப்.16- வாணியம்பாடியில் விற்பனைக்காகக் காய்கறிகளைக் கொண்டுவந்த விவசாயி திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தார். திருப்பத்தூர் மாவட்டம் வாணிய ம்பாடியில் தடை உத்தரவு நடைமுறை ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிராமங்க ளிலிருந்து விவசாயிகள் கொண்டுவரப்படும் காய்கறிகளை செட்டியப்பணுர் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் சேமித்து வைக்கப்படுகிறது. ஆலங்காயம் ஓமகுப்பம் பகுதியைச் சேர்ந்த உமாபதி என்ற விவசாயி வியாழக்கிழமை காய்கறிகளைக் கொண்டு வந்தபோது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அந்த இடத்திலேயே சரிந்து விழுந்த அவர் பின்னர் உயிரிழந்தார்.

சிறு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அவருக்கு பிளஸ்-2 படிக்கும் ஒரு மகள் உள்ளார். தேர்வெழுதி முடிவுக்காகக் காத்திருக்கும் அந்த மாணவிக்கு அரசு உரிய உதவித்தொகையை வழங்குவதோடு அவருக்கு அரசு வேலையும் வழங்கவே ண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் தயாநிதி மாவட்ட ஆட்சியரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆட்சியர் உறுதி

உயிரிழந்த விவசாயிக்கு உதவி செய்யு மாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலபொதுச் செயலாளர் பெ.சண்முகம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைவிடுத்தார். உதவி செய்வதாக ஆட்சியரும் உறுதியளித்துள்ளார்.