tamilnadu

img

காப்பீடு தொகையில் குளறுபடி

போராட்ட களமாக மாறும் டெல்டா

திருவாரூர், அக்.20- விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக மேற்கொண்டுவரும் டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் ஏற்படும் புயல், வெள்ளம், வறட்சி, உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாக நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கடந்த 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியின் கோரதாண்ட வத்தால் நாகை மாவட்டத்தில் அதிகமான கிரா மங்கள் பாதிக்கப்பட்டன. இந்த சீற்றத்தின் விளைவாக உப்பு நீர் நிலத்தடி வழியாக உள்ளே புகுந்து சில கிராமங்களில் தற்போது நிலத்தடி நீர் உப்பு நீராக மாறியுள்ளது. இதன் காரணமாகவும் பல்வேறு கிராமங்களில் விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2018 நவம்பர் 17 அன்று கொடூர மாக தாக்கிய கஜா புயலின் பாதிப்பில் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் இழப்பை சந்தித்தன. இந்நிலையில் முப்போக சாகுபடி வாய்ப்பில்லா மல் கடந்த 5 ஆண்டுகளாக ஒருபோக சாகுபடி யான சம்பா மட்டுமே நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் வழங்கி வந்த விவசாய கடன்களும் உரியவாறு கிடைக்க வில்லை. பல்வேறு நிபந்தனைகளால் விவசாயி கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வட்டியில்லா நகை கடன் வழங்குவதிலும் மத்திய அரசின் அறிவிப்பால் குளறுபடிகள் ஏற்பட்டு விவ சாயிகள் பெரும் துன்பதுயரங்களுக்கு ஆளாக் கப்பட்டுள்ளனர்.

வேளாண் காப்பீடு திட்டத்திலும் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. காப்பீடு திட்டத்தின் மூலம் கிடைக்கக்கூடிய இழப்பீட்டு தொகையை விவசாயிகள் ஏற்கனவே பெற்றிருந்த வங்கிக் கடன் நிலுவைதொகை யில் வரவுவைக்கப்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. கஜா புயல் பாதிப்புக்காக வழங்கப்பட்ட நிவாரண நிதியை மகசூல் தரும் பிற பயிர்களுக்கு மாநில அரசு வழங்கியது. ஆனால் நெல் பயிர் இழப்பு ஏற்பட்டதற்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை.

நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளுக்கு தென்னை, சவுக்கு, தேக்கு, வாழை உள்ளிட்டவை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. நெல்லுக்கு மிகப் பெரிய அளவில் மகசூல் பாதிப்பு இருந்தது. இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் போதிய அளவிற்கு இழப்பீடோ, நிவாரணமோ வழங்கப் படாத குறைபாடு உள்ளது. இந்த சூழ்நிலையில் காப்பீடு நிறுவனம் எடுத்த மகசூல் சோதனையில் கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டு அதை ஈடுசெய்யும் வகையில் இழப்பீடு வழங்கப் பட்டது. இதில் 2018-19 ஆண்டுக்கான பிரிமிய தொகைக் கட்டியவர்களுக்கும் முழுமையான காப்பீடு தொகை கிடைத்தபாடில்லை. கஜா புயல் தாக்கிய பின்னணியில் இந்தாண்டு அதிகமான காப்பீடு தொகை கிடைக்கும் என்று எண்ணியிருந்த விவசாயிகளுக்கு அதிலும் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு காப்பீடு நிறுவனத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை மிக குறைவாக உள்ளது. இதை எப்படி கையாள்வது என்று தெரியாமல் வேளாண் துறை பெரும் குழப்பத்தில் உள்ளது.

இழப்பீடுகளை கண்டறிவதில் காப்பீடு சட்டப்படி புள்ளியியல்துறை, வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் கிராம விவசாயக் குழு முன்னிலையில்தான் மகசூல் சோதனை செய்யவேண்டும் என்ற விதிப்படி கையாளபடவில்லை. உரிய அதிகாரிகளை கேட்டால் கடந்த 5 ஆண்டுகளின் நெல் விளைச்ச லின் சராசரி அளவை கொண்டு இழப்பீடு தொகை நிர்ணயம் செய்ததாக தெரிவிக்கின்ற னர். இதுவே முறைப்படி சரியாக செய்ய வில்லை என்பதுதான் விவசாயிகளின் குற்றச் சாட்டாக உள்ளது. இதுமட்டுமல்ல; காப்பீடு நிறுவனம் விவ சாயிகளுக்கு வழங்கியுள்ள இழப்பீட்டை தற்போது வணிக வங்கிகளும், தனியார் நிறுவனங்களும் நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர். கூட்டுறவு வங்கி நிர்வா கம் மட்டும் அதை வழங்குவதில் தாமதம் செய்து வருவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு இதுபோன்ற பாதிப்பை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. பாதிக்கப் பட்ட அனைத்து வருவாய் கிராமங்களுக்கும் உரிய காப்பீடு தொகையை வழங்க வலி யுறுத்தி விவசாயிகள், அனைத்து அரசில் கட்சி யினர் டெல்டா மாவட்டங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  நிலைமையை கணக்கில் எடுத்து பிரச்ச னைக்கு உரிய நியாம் வழங்கிட காப்பீடு நிர்வாக மும் அரசும் முன்வரவேண்டும் என்பதே டெல்டா மாவட்டத்தின் இப்போதைய பிரச்சனையாகும்.

ஐ.வி.நாகராஜன்