சென்னை,ஜன.4- தமிழகம் முழுவதும் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் இன்று நடைபெறு கின்றன. கடந்த மாதம் 23 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் செய்வதற்கான முகாம்கள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளான ஜனவரி 4, 5 மற்றும் 11, 12-ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி தமிழகம் முழுவதும் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாக்குச் சாவடி மையங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மேலும் வாக்காளர்கள் பெயர் பிறந்த தேதி, முகவரி உள்ளிட்டவற்றில் திருத்தங்களை செய்யவும் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. www.nsvp.in என்ற இணையதளம் மூலமும் Voters Helpline என்ற செயலி மூலமும் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.