tamilnadu

img

கோட்டையை முற்றுகையிடச் சென்ற ஆயிரக்கணக்கானோர் கைது

சிஏஎவுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக!

சென்னை, மார்ச் 9- சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகிய வற்றை ஏற்க மாட்டோம் எனவும், தமி ழகத்தில் தேசிய மக்கள் தொகை பதி வேட்டை அமல்படுத்த மாட்டோம் எனவும் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று (மார்ச் 9) கோட்டை முற்றுகையிடப்படும் என்று  அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து திங்களன்று காலை சென்னை பாரிமுனை அருகே பெரு மளவில்  கட்சியினரும் ஆதர வாளர்களும் திரண்டனர். பின்னர் அங்கி ருந்து கோட்டை நோக்கி கோரிக்கை களை முழங்கியவாறு  மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை யில் பேரணியாகச் சென்றனர். பேரணி யாகச் சென்றவர்களை சிறிது தூரத்தில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்தர ராசன், மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.ஏ.பெருமாள், பா.ஜான்ஸிராணி, ஏ.ஆறுமுக நயினார், வெ.ராஜசேகரன், க.பீம்ராவ், ஜி.சுகுமாறன், எஸ்.கண்ணன், ஆர்.பத்ரி, சென்னை மாவட்டச் செய லாளர்கள் ஏ.பாக்கியம், எல்.சுந்தர ராஜன், ஜி.செல்வா உள்ளிட்ட ஆயி ரக்கணக்கானோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் ஏராளமான இஸ்லாமியப் பெண்களும் கலந்து கொண்டனர்.

போராட்டத்திற்கு தலைமையேற்ற கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், என்பிஆர், என்ஆர்சி ஆகிய வற்றை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகளும், இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து போராடி வருகின்றன.  ஆனால் தமிழக முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமி அந்த சட்டத்தை எதிர்த்து  சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்ற மறுக்கிறார். அதனால்தான் ஆங்காங்கே மாவட்ட தலைநக ரங்களில் போராடிய நாங்கள் சட்ட மன்றத்தின் கதவுகளைத் தட்டுகிற போராட்டத்தை  நடத்த வேண்டிய சூழ்நிலை. தென்னகத்திலே உள்ள கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்டு எல்லா  மாநில அரசுகளும் என்.பி.ஆர். கணக்கெடுப்பை நடத்தமாட்டோம் என  அறிவித்துவிட்டனர். 

மேலும் கேரள அரசு தீர்மானம் நிறை வேற்றியதோடு மட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத் துள்ளது. என்பிஆர் கணக்கெடுப்பை நடத்தி விட்டால் சாதாரண ஏழை எளிய நடுத்தர, பழங்குடியின மக்க ளுடைய கழுத்திலே சுருக்குக் கயிறை மாட்டுவதற்கு ஒப்பானதாகும். எனவே தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும், என்.ஆர்.சி., என்.பி.ஆரை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறை வேற்ற வேண்டும். அரசின் மெத்தனப் போக்கே தற்போது நடைபெறும் போராட்டங்களுக்கு காரணம் என அவர் சாடினார்.  

         (ந.நி.)
 

;