tamilnadu

img

குடியுரிமைக்கான போராட்டம் தேசத்தை காக்கும் போராட்டம்

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை, பிப். 27 - குடியுரிமைக்கான போராட்டம் தேசத்தை காக்கும் போராட்டம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை  சார்பில் புதனன்று (பிப். 26) சென்னை யில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேசியதன் சுருக்கம் வருமாறு: குடியுரிமைப் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் மக்கள் போராடி வரு கிறார்கள். நாடு கொந்தளிப்பாகவும், பட படப்புடனும், அதிர்ச்சியில் உரைந்து, அச்சத்தால் பீடிக்கப்பட்டு இருக்கிறது. தில்லியில் நடக்கும் காட்சிகளைப் பார்த்தால், வன்முறையாளர்கள் கை யில் தலைநகர் போய்விட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. உள்துறை அமைச்சர் என்ன செய்கிறார்? சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற மத்திய அரசு தவறி இருக்கிறது. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதற்கான மனம் மத்திய அரசுக்கு இல்லை.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை எதிர்க் கட்சிகள் தூண்டவில்லை. இந்தியாவை; நாட்டின் ஒருமைப்பாட்டை இந்திய மக்களைக் காப்பாற்றுவதற்காக ஒன்றுபட்டு நிற்கிறோம். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை பார்க்க சென்ற போது, அங்கு வைத்திருந்த பெயர் பலகையையே  காணவில்லை. இதுபோன்ற ஆயிரம் பிரச்சினைகள் அரசியல் செய்வதற்கு இருக்கிறது. எனவே, குடியுரிமையை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் நமக்கு இல்லை.

குடியுரிமை வழங்குவதற்காகத் தான் அரசு சட்டம் இயற்றும். மாறாக, குடி யுரிமையைப் பறிப்பதற்காக ஒரு அரசு சட்டம் இயற்றுகிறது. சிஏஏ, என்பிஆர் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம் என்ற அச்சத்தால் மக்கள் போராடு கிறார்கள். அதைப் போக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. குடி யுரிமைப் போர் என்பது இஸ்லாமியர் களின், இந்துக்களின் போர் அல்ல; இந்தியர்களைக் காப்பதற்கான போர். என்ஆர்சி-யால் அசாம் மாநிலத்தில் குடியுரிமை இழந்த 19 லட்சம் பேரில் 13  லட்சம் பேர் இந்துக்கள். இந்து மதத்தைக் காப்பாற்றுவதற்காக அவதாரம் எடுத்த தாக நடிப்பவர்கள் எங்கே போனார் கள்? குடியுரிமைப் பதிவேடுகளால் இஸ்லா மியர்களுக்கு மட்டும்தான் பாதிப்பு என்று  கூறி, நம்மை இந்துக்களின் எதிரி களாகக் காட்டுவதற்கு ஒரு கூட்டம் துடிக்கிறது. அதற்காகத் சதித்திட்டம் தீட்டி செயல்படுகிறார்கள்.

இந்துத்துவாவை எதிர்க்கிறோமே தவிர இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களை அல்ல. கடவுள் நம்பிக்கையில் தங்களது வன்மத்தை, அராஜகத்தைச் சர்வாதி காரத்தைத் திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம். மனித மனங்களைப் பிளவுபடுத்தும் காரியங்களை விட்டு மாற்றுவழியை யோசியுங்கள். என்பிஆரால், யாருக்கும் பாதிப்பு வராது என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிதாக கேட்கப்பட்டுள்ள கேள்விகளை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி யிருக்கிறார். ஆபத்து இருக்கிறது என்பதை அவரே ஒப்புக் கொண்டுள் ளார். எனவே என்பிஆரை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும்.  அமைச்சரவையைக் கூட்டி, குடி யுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப்  பெற வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்ற வேண்டும். சிஏஏ, என்பிஆர், என்ஆர்சியை கைவிட்டு, இந்தியாவை அமைதியான நாடாக மாற்றுங்கள். இவ்வாறு அவர் பேசினர்.

;