tamilnadu

img

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்: தலைவர்கள் கண்டனம்

சென்னை,ஜூன் 29- நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்  டத்திற்கு கொண்டு வரும் மத்திய அரசுக்கு  இரா. முத்தரசன், வைகோ, கி.வீரமணி ஆகி யோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,“ மோடி  தலைமையிலான பாஜக அரசு முன்பைவிட  மூர்க்கத்தனமான வேகத்தில் செயல்பட துவங்கியிருக்கிறது. ஒரே தேர்தல்; ஒரே தேசிய  கல்விக் கொள்கை; ஒரே சுகாதாரக் கொள்கை;  ஒரே நுழைவுத் தேர்வு; ஒரே வரி என்பதில் தொடங்கி, தற்போது நாடு முழுவதும் ஒரே  குடும்ப அட்டை எனும் திட்டத் திற்கு அகரம்  எழுதியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு தேசிய  இனங்களின் உணவுப் பழக்க வழக்கங்கள்  வெவ்வேறானவை. பொது விநியோக முறையை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதன் மூலம். நாடு முழு வதும் உணவுப் பழக்க வழக்கங்களையும் ஒரே முறையில் மாற்ற வேண்டும் என்கிற பாஜக அரசின் உள்நோக்கம் நாட்டில் விபரீத  விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே, திட்டத்தைக் கைவிட வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தனது அறிக்கையில், “ஒரே நாடு (இந்துராஷ்டி ரம்), ஒரே மதம் (`ஹிந்து மதம்), ஒரே கலாச்சா ரம் (சமஸ்கிருத கலாச்சாரம்), ஒரே மொழி (சமஸ்கிருதம்), ஒரே தேர்தல் (இறுதியில் ஜனநாயகத்திற்கு விடை கொடுக்கும் ஒரே  அதிபர் என்பதை நோக்கியே) என்கிற திட்டமிட்ட வரிசையில், ஒரே குடும்ப அட்டை என்பதை மத்திய அரசு அறிவித்திருப்பது, கூட்டாட்சித் தத்துவத்தை ஒழித்து, மாநில உரிமைகளைப் பறித்து, ஒற்றை (மத்திய) ஆட்சி முறை என்பதற்கே வழிவகுக்கும் ஒரு மறைமுக ஏற்பாடாகும். தமிழ்நாடு மாநிலத்தின் உணவு உரிமை என்பதைவிட, நம் மாநிலத்தின் உரிமைப் பிரச்சனை இது என்பதால், தெளிவுடனும், துணிவுடனும் நடந்துகொள்ளவேண்டும். இதனை முளையிலேயே கிள்ளி எறிய முன் வரவேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் இரா. முத்தரசன்,“ மத்திய அரசு கொண்டு வரும் ஒரே நாடு ஒரே குடும்ப  அட்டைதிட்டம் தேவையற்றது” என்றார்.

;