tamilnadu

img

சுழற்சி முறை ஓய்வு தேவை: சுகாதார பணியாளர்கள்

விழுப்புரம், ஏப்.21 - தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும்  நிலையில், முதன்மையாக மேற்கொள்ளப்படும் நோய் பரவ லைக் கட்டுப்படுத்தும் பணியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறையினர் ஈடுபட்டுள் ளனர். இதில், மருத்து வர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவி லியர்கள், மருந்தாளுநர்கள், ஆய்வகப் பணியாளர்கள் என சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  களப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போதிய அளவில் தடுப்பு உபகரணங்களும்,  பாதுகாப்பு நெறிமுறைகளும் இல்லாமல் பணியாற்றுவதாக பொதுசுகாதாரத் துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டத்தில் களப் பணியில் ஈடுபட்டுள்ள அத்துறையினர் இடையே பேசுகையில், "கொரோனா அறிகுறியுள்ள ஒருவரை அவருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்படும் முன்பு வரை எந்தவித பாதுகாப்பு மின்றி நேரடியாக கள பணியில் ஈடுபட்டு உள்ள சுகாதாரத் துறைப் பணியாளர்கள்தான் தொடர்பு கொள்கின்றனர். இவர்க ளின் ஆய்வுக்குப் பிறகே, அரசு மருத்துவமனைகள் மற்றும்  கொரானா சிறப்பு சிகிச்சை பிரிவு மையங்களுக்கு நோய்த் தொற்றுள்ள நபர் அனுப்பி வைக்கப்படுகிறார்" என்றார். சுகாதாரத் துறை மருத்துவர்களுக்கும், களப் பணியாளர்க ளுக்கும் தரமான (என் 95) முகக் கவசங்கள், கையுறைகள், கிருமி  நாசினிகள் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும். நோய்த் தொற்றைக் குறைக்கும் வகையில், மருத்துவக் கல்வி மற்றும்  மருத்துவப் பணிகள் இயக்குநரகத்தின் கீழுள்ள மருத்துவ மனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், பணியாளர்கள்  3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒரு பிரிவினர் பணியிலிருக்கை யில் மற்றொரு பிரிவினர் ஓய்வெடுத்து தனிமைப்படுத்திக் கொள்ள வழிவகை செய்துள்ளனர்.

அதேபோல, வார விடுமுறையின்றி தொடர்ச்சியாக பணி யாற்றி வரும் பொது சுகாதாரத் துறை மருத்துவர்களுக்கும், பணி யாளர்களுக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில், தங்களை  தனிமைப்படுத்திக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். ஊழி யர்கள் வீடுகளுக்குச் செல்வதைத் தவிர்த்திடும் வகையில், தங்குமிடம் ஏற்படுத்தித் தர வேண்டும். இது அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பிறருக்கு நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கும். களப் பணியின்போது சுகாதாரத்  துறை ஊழியர்களிடம் தரக்குறைவாக நடந்துகொள்ளும் பொதுமக்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

குறைந்தபட்சம் தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளி களுடன் தொடர்பில் உள்ள மருத்துவப் பணியாளர்களுக்கும்,  அறிகுறிகள் உள்ள மருத்துவப் பணியாளர்க ளுக்குமாவது நோய்த் தொற்று உள்ளதா என பரிசோதனை செய்து, அறிகுறிகள்  தென்பட்டால், உடனே தனிமைப்படுத்தி பாதுகாப்பை உறுதி  செய்ய வேண்டும் என்றும் ஆதங்கத்தை தெரிவித்தார்.

;