tamilnadu

மனநலம் பாதித்தவரை குடும்பத்தினருடன் சேர்த்த காவலரின் மனிதநேய செயல்

கள்ளக்குறிச்சி. ஜூலை 20- 14 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன நபர்  காவலர் ஒருவரின் மனிதாபிமான முயற்சியால் அவரது  குடும்பத்தினருடன் சேர்த்து வைத்துள்ள நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழக்குப்பத்தில் காவல்  நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் கருப்பையா. கடந்த 2 மாதங்களுக்கு முன்  பெரம்பலூர்,  கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையான கூகையூர் சோத னைச் சாவடியில் கொரோனா தொற்று தடுப்பு பணி யில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு அலங்கோல நிலையுடன் மனநலம் பாதிக்கப்பட்ட 62 வயது முதிய வர் ஒருவர் வந்துள்ளார். அவரைக் கண்ட காவலர்  கருப்பையா அவருக்கு உணவு வாங்கிக் கொடுத்து, அவரிடம் விசாரித்துள்ளார். பின்னர் அந்த முதியவருக்கு புதிய ஆடைகள்  வாங்கிக் கொடுத்து அவருடன் புகைப்படம் எடுத்து தனது வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்துள்ளார்.

அப்பதிவை பார்த்த ஆலாத்தூரை சேர்ந்த தினகரன்  என்ற நபர் சங்கராபுரம் அடுத்த புதுப்பட்டு கிரா மத்திற்கு சென்று மணி என்ற பெண்ணிடம் போட்  டோவை காண்பித்து விசாரித்துள்ளார். இதில் காவ லர் கருப்பையாவுடன் இருக்கும் மனநலம் பாதித்த முதியவர் மணியின் கணவர் என்பதும், பெயர் சின்னான் என்பதும், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு  அவர் காணாமல் போனதும் தெரியவந்தது. இதையடுத்து முதியவர் சின்னான் குடும்பத்தி னர் கீழக்குப்பம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்ற னர். தங்களுக்கு முதியவர் சின்னான் திரும்ப கிடைக்க  காரணமான காவலர் கருப்பையாவிற்கும், பிற காவலர்  களுக்கும் நன்றி தெரிவித்து அவரை அழைத்துச் சென்ற னர். காவலர் கருப்பையாயின் மனிதநேயமிக்க செயலை சக காவலர்களும், பொதுமக்களும் பாராட்டி னர்.

;