tamilnadu

img

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள் 44 பேரை மீட்க நடவடிக்கை எடுத்திடுக!

முதலமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை, ஜூலை 10-   ஈரான் நாட்டில் தவிக்கும் 44 தமிழக மீன வர்களை மீட்பதற்கு  தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். முத லமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா காரணமாக சர்வதேச போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில், ஈரான் நாட்டிற்கு மீன்பிடி தொழிலுக்கு சென்ற குமரி மாவட்டத்தை சேர்ந்த 562 மீனவர்கள் உட்பட தமிழ்நாட்டை சேர்ந்த 750 மீனவர்கள், உணவு, தங்குமிடம் இல்லாமல் தமிழகம் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் இந்திய அரசு ஈரான் நாட்டிலிருக்கும் தமிழக மீனவர்களை மீட்க கப்பல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக ஒவ்வொரு  மீனவரும் பயணக்கட்டணம் உட்பட ரூ.10ஆயிரம் செலவை ஏற்க வேண்டி யிருந்தது. கப்பலில் இடமில்லை என்ற காரணத்தைக் கூறி 44 தமிழக மீனவர்களை அங்கேயே விட்டுவிட்டு கப்பல் ஈரானி லிருந்து புறப்பட்டுவிட்டது. கப்பலில் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான வெளியேற்ற முத்திரைப் பெற்ற பிறகு தமிழகம் திரும்ப இயலாத நிலைக்கு தள்ளப்பட்ட 44 மீனவர்களின் நிலை மேலும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது.

வெளியேற்ற முத்திரை பெற்று விட்டதால் அரசு ரீதியான உதவிகளை, ஈரான் அரசிடம் பெற இயலாமல் சென்று விட்டது. இந்த விடுபட்ட மீனவர்களை மீட்க விமானம் ஏற்பாடு செய்து அதற்கான பயணச் செலவை தமிழக மீனவர்களை ஏற்க கூறியுள்ளதாக தெரிகிறது. வாழ்வா தாரத்திற்காக கூலி வேலைக்கு சென்றவர் களிடம், நான்கு மாதங்களாக வேலையும், வருமானமுமின்றி தவித்து வருபவர் களிடம் இவ்வளவு பெரிய தொகையினை பய ணக்கட்டணமாக கேட்பது வேதனைக்குரியது. எனவே, ஈரானில் விடுபட்ட 44 தமிழக மீனவர்களை இந்திய அரசு தன் சொந்த செலவில் விமானத்தில் அழைத்து வர  மத்திய அரசுக்கு, தமிழக அரசு வலியுறுத்த  வேண்டுமெனவும், அவ்வாறு இந்திய அரசு ஏற்க மறுக்கும் பட்சத்தில், தமிழக அரசு தன் செலவிலாவது மீட்க உரிய நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன். மேலும், அதுவரை ஈரானில் தவிக்கும் 44 தமிழக மீனவர்களுக்கு உணவு, உறைவிட வசதிகளை ஏற்பாடு செய்து தருவதோடு, அவர்களை பிரிந்து எந்த வருமானமும் இல்லாமல் வாடும் மீனவ குடும்பங்களுக்கு தகுந்த இழப்பீட்டினை தமிழக அரசு வழங்க வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;