tamilnadu

img

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்

எடப்பாடி பழனிசாமிக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

திருநெல்வேலி, டிச.21- இரட்டைக் குடியுரிமை குறித்து மத்திய அரசிடம் பேசுகிறேன் என தமிழக முதல்வர் பழனிசாமி கூறுவது, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது என நெல்லை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியா ளர்களிடம் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமை சனிக்கிழமை பார்வையிட்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: இலங்கையில் கடந்த 1983 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் அங்கிருந்து அண்டை நாடான இந்தியாவின் பல பகுதி களில் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக குடியேறினர். இவர்கள் இந்தியாவில் சுமார் 1 லட்சத்துக்கும் மேல் உள்ளனர். இவர்கள் இந்தியா வந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகள் என்ற நிலையில் வாழ்கி றார்கள். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 

தற்போது இந்திய அரசு கொண்டு வந் துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை அளிக்க எந்த வாய்ப்பும் இல்லாத நிலை உள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்க்கிறோம். இலங்கை யில் இருந்து இந்தியாவுக்கு வந்த தமி ழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்துள் ளோம். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகளில் இருந்து வரும் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு மட்டும் குடியுரிமை உண்டு என்பதை ஏற்க முடியாது.  இந்த முகாமில் உள்ள மக்களிடம் பேசுகை யில், “எங்கள் வாழ்க்கைதான் அகதியாகவே போய்விட்டது. எங்களின் பிள்ளைகளின் வாழ்க்கையாவது நன்றாக இருக்க வேண் டுமே. அவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடக்கூடாது” என்றனர் வேதனையுடன். அவர்களுக்கு அரசு வழங்குகிற நிவாரணத் தொகையை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்வது முடியாத ஒன்று.  முன்பு மக்கள வையில் இரட்டைக் குடியுரிமை சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு ஆதரவாக வாக்களிக்கவில்லை. அப்போது விட்டுவிட்டு, இப்போது இரட்டைக் குடியுரிமை குறித்து மத்திய அரசிடம் பேசு கிறேன் என எடப்பாடி பழனிச்சாமி கூறுவது, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது. 

டிச. 23 ஆம் தேதி இரட்டை குடியுரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் அனைத்து எதிர்கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தவுள்ளோம். இதனையும் மத்திய அரசு கண்டு கொள்ளா விட்டால் தொடர்ந்து வேறு பல போராட்டங் களை முன்னெடுப்போம்.  தற்போது இந்திய பொருளாதாரம் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வரு கிறது. பொதுத்துறை நிறுவனங்களை தனி யாருக்கு விற்கும் நிலையில் உள்ளனர். இதனை மறைப்பதற்காக இந்து முஸ்லீம் என்ற பிரச்சனைகளை தூண்டிவிட்டு அதில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது மத்திய அரசு. மத்தியில் ஆளும் பாஜக அரசின் கொள்கைகள் அனைத்து ஆர்எஸ்எஸ் கொள்கைகள்தான். அவர்களுடைய கொள் கைகள் அனைத்தையும் இவர்கள் செய்து கொடுக்கும் கட்சியாக இருக்கிறது. வன்முறை பிரச்னைக்கு தீர்வாகாது என்று கூறும் ரஜினி, யாருடைய பக்கம் இருந்து கூறுகிறார் என்பது மக்களுக்கு தெரியும். 

ஷாமியா பல்கலைக்கழகத்திற்குள் காவல்துறையினர் அத்துமீறி நுழைந்து மாணவிகள் மீது தாக்குதல் நடத்தினர். இது போன்று ராணுவம், காவல்துறையின் அடக்கு முறையால் சுவற்றில் வீசப்பட்ட பந்து போல பிரச்சனைகள் பெரிதாகிக் கொண்டேதான் செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.  பேட்டியின் போது மாவட்டச் செயலா ளர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீ.பழனி, பாளை தாலுகா செய லாளர் வரகுணன், தாலுகா குழு உறுப்பி னர்கள் டி.கோபாலன், ரவி, சண்முகம் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.

;