சென்னை,ஏப்.23 இண்டஸ்இண்ட் வங்கி மாநில அரசுகள் மற்றும் அவற்றின் அமைப்புகளுடனும், தேசிய அளவிலும் கோவிட்-19 வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக மேற்கொண்டு வரும் முயற்சிகளில், இணைந்து செயல்பட்டு வருகிறது.
இவ்வங்கி 30 கோடி ரூபாயை கோவிட்-19 நிவா ரண நடவடிக்கைகளுக்கு தனது பங்களிப்பாக வழங்க உறுதிப்பூண்டிருப்பதோடு, இச்சூழலில் தேவைப்படும் அம்சங்களையும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
தனது உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, கொரோனா வைரஸ் தொற்றுநோயினால் பாதிக் கப்பட்டு அதை எதிர்த்து போராடிவரும் பகுதி களுக்கு முகக்கவசகங்கள், சானிடைசர்கள் மற்றும் கையுறைகள் போன்ற நிவாரணப் பொருட்களை இண்டஸ்இண்ட் வங்கி ஏற்கனவே வழங்கியுள்ள தாக அதன் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.