tamilnadu

உடை கட்டுப்பாடு: உத்தரவை திரும்பப் பெறுக!

சென்னை, ஜூன் 2-அரசு அலுவலகங்களில் ஊழியர்களுக்கு உடை கட்டுப்பாடு விதித்து தமிழக தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ளஉத்தரவுக்கு தமிழகத்தின் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக கூட்டமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான பி.சுகந்தி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அரசு உத்தரவில்அரசு அலுவலகங்களில்  பெண்கள் சேலை, சுடிதார், சல்வார் கம்மிஸ்  அணிந்து வரலாம்; சுடிதார், சல்வார் கம்மிஸ் அணிந்து வரும்போது கட்டாயம் துப்பட்டாஅணிந்து வர வேண்டும் என்று அறிக்கைவெளியிடப்பட்டு உள்ளது. கண்ணியமான உடை அணிந்து வர வேண்டும் என்று ஏற்கனவே உடை குறித்து அரசுஅலுவலகங்களில் உள்ள குறிப்பே போதுமானது. என்ன உடை அணிந்து வர வேண்டும்என்பதை அரசு தீர்மானிப்பது முறையல்ல. பழைய பழமைவாதங்களில்  இருந்து வெளியேறி தற்போது தான் பெண்கள் இலகுவான, வசதியான சுடிதார் போன்ற உடைகளை அணிவது இயல்பானதாக மாறி உள்ளது.பாலியல் சமத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியதே அரசின் பணியாகும். மாறாக சமூகத்தில் நடக்கும் பாலியல்  வன்குற்றங்களுக்கு பெண்களின் உடையை காரணமாக சொல்லும் பிற்போக்குத் தனமான கருத்துக்களுக்கு வலுச் சேர்க்கும் விதமாக உடைக் கட்டுப் பாட்டினை அரசே கொண்டு வருவது சரியல்ல.பெண்களை பொருளாகவும், தரக்குறைவாகவும்  சித்தரிக்கும் சினிமா போன்ற ஊடகங்களை முறைப்படுத்துங்கள். பாலின சமத்துவக் கல்வியை கொண்டு வாருங்கள். அதை விடுத்து, இன்று அரசு அலுவலர்களிடம், நாளை பொது மக்களிடம்என கட்டுப்பாடுகளை விதிப்பதை அனைத்துபெண்கள் கூட்டமைப்பு சார்பாக கண்டிக்கின்றோம். இது தொடர்பான அரசு உத்தரவை திரும்ப பெறுமாறு அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை விடுக் கின்றோம்.

;