ஒலிம்பிக் சோதனை குத்துச் சண்டை
கோடை ஒலிம்பிக் தொடர் அடுத்தாண்டு ஜப்பானில் நடைபெறுகிறது. இந்த தொடருக்குத் தயாராகும் வகையில் குத்துச் சண்டை பிரிவுக்கான சோதனை போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. வியாழனன்று நடைபெற்ற ஆடவர் 63 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரரான சிவா தபா கஜகஸ்தானின் சனடாலியை 5-0 என்ற புள்ளி கணக்கில் என்ற கணக்கில் பந்தாடித் தங்கப்பதக்கம் வென்றார். மகளிருக்கான 75 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பூஜா ராணி ஆஸ்திரேலியா வின் பார்க்கரை வீழ்த்தித் தங்கப்பதக்கம் வென்றார்.