tamilnadu

img

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்திற்கு எஸ்பிஐ அறக்கட்டளை ஆதரவு

சென்னை, மே 3- நாடு முழுவதும் பல்வேறு கொரோனா  நிவாரண திட்டங்களை செயல்படுத்து வதற்காக எஸ்.பி.ஐ வங்கியின் அறக் கட்டளை  ரூ.30 கோடி ஒதுக்கியுள்ளது. ப்ராஜக்ட் எக்கோ இந்தியாவுடன் இணைந்து 50,000 சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களுக்குப் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது பாதிக்கப்பட்டோர் அதிகமுள்ள மருத்துவமனைகளுக்கு வென்டிலேட்டர், தனி பாதுகாப்பு உபகரணங்கள் விநி யோகிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 4 மையங்களில் தினமும் 10,000 பேருக்கு மதிய உணவை இவ் அறக்கட்டளை வழங்கி வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்ளும் சுகா தாரப் பராமரிப்பு முயற்சிகளுக்கு துணை நிற்கும் வகையில் இந்தியா கொரோனா சுகாதாரப் பராமரிப்பு கூட்டணி  எனும் திட்டத்தையும் தொடங்கியுள்ளதாக  எஸ்பிஐ தலைவர் ஸ்ரீரஜினிஷ் குமார் கூறியுள்ளார்.