tamilnadu

img

கொரோனோ தடுப்பு பணிக்கு நன்கொடை வழங்க கோரிக்கை

சென்னை, மார்ச் 28- தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளுக்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, தாராளமாக மனமுவந்து நன்கொடை அளிக்க வேண்டும். இந்த நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் பிரிவு 80(ஜி)-ன் கீழ், 100 விழுக்காடு வரிவிலக்கு உண்டு. வெளிநாடு வாழ் இந்தி யர்கள், அல்லது வெளிநாட்டு மக்களிடமி ருந்து பெறப்படும் நிவாரணத்திற்கும் அயல்நாட்டு பங்களிப்பு ஒழுங்காற்றுச் சட்டத்தின் கீழ் விலக்க ளிக்கப்படும்.

10 லட்ச ரூபாய்க்கு மேல் நிதியுதவி அளிக்கு நபர்கள் அல்லது நிறுவனங்களின் பெயர்கள் பத்திரிக்கை செய்தியாக வெளியிடப்படும். நெட் பேங்கிங், டெபிட் (அ) கிரடிட் கார்டு மூலம் அரசின் இணையதளத்தில் நன்கொடை அனுப்பலாம் என்றும், அல்லது, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமைச் செயலக கிளைக்கு நேரடியாக இசிஎஸ் முறையில் நன்கொடையை அனுப்பலாம். கொரோனா தொற்றால் ஏழை எளிய மக்கள் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய இன்னல்க ளிலிருந்து அவர்களை விடுவிக்கவும், தடுப்பு நடவடிக்கைகளுக்கும், மனம் உவந்து மக்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

;