tamilnadu

img

ஒக்கி புயலில் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு நிவாரணம், வேலை, குடியிருப்பு வழங்கி மறுவாழ்வு

தமிழக அரசும் கேரள அரசும் செய்தது என்ன?

நாகர்கோவில், நவ.22- கேரள அரசு ஒக்கி புயலில் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங் களுக்கு வாக்குறுதி மட்டும் அளித்தது. தமிழக அரசு ரூ.20 லட்சம் வழங்கியது என குளச்சலில் நடந்த விழாவில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெய குமார் பேசினார். இதற்கு விளக்க மளித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஒக்கி புயலில் உயிரிழந்தது தமிழக மீனவர்கள் 108 பேர், காணாமல் போனவர்கள் 400 பேர், கேரள மீனவர்கள் உயிரிழப்பு 174, காணாமல் போனவர்கள் 261 பேர். நிர்கதியாக நின்ற இந்த குடும்பங்களுக்கு தமிழக, கேரள அரசுகள் என்ன செய்துள்ளன என்பதை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வியாழனன்று (நவ.22) கன்னியாகுமரி் மாவட்டம் குளச்சலில் நடந்த மீனவர் தின விழா வில் ஒப்பிட்டு பேசியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. கேரள அரசு ஒக்கி புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்குறுதி மட்டும் அளித்தது. தமிழக அரசு ரூ.20லட்சம் நிவாரணம் வழங்கி யது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உண்மையில் ஒக்கி புயலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு மட்டுமல்ல காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கும் கேரள அரசு ரூ.20  லட்சம் வழங்கியது. காணாமல் போன வர்களை இறந்துவிட்டதாக 7 ஆண்டு களுக்குள் சான்றளிக்க முடியாத நிலையில் பணம் வங்கியில் வைத்து வட்டியை அந்த குடும்பங்கள் பெற்று வருகின்றன. இது இதுவரை வேறு எங்கும் நடைமுறையில் இல்லாத ஒன்று. பழுதான படகுகளை சீரமைக்க உபகரணங்களை வழங்கியது. இரண்டு படுக்கை அறைகள் கொண்ட தலா 8 வீடுகள் கொண்ட 24 அடுக்கு மாடி குடியிருப்புகளை 192 மீன் தொழி லாளர் குடும்பங்களுக்கு கேரள அரசு கட்டி கொடுத்துள்ளது. கடலோர காவல் படையில் பெண்கள் உட்பட 200 பேருக்கு பயிற்சி அளித்து பணி நிய மனம் வழங்கியுள்ளது.

ஆனால் தமிழக அரசோ கேரள அரசு அறிவித்த பிறகுதான் அதை பின்பற்றி ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கியது. எத்தனை பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டது என் பதை அமைச்சர் ஒப்பிட்டு கூறியிருக்க வேண்டும். மாறாக காணாமல்போன மீனவர்களை மீட்க போராடியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது தமிழக காவல்துறை. ஒக்கி புயல் நிவார ணம் கேட்டு புதுக்கோட்டையில் போராட் டத்தில் ஈடுபட்ட 103 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

சென்ற ஆண்டு எம்ஜிஆர் நூற்றா ண்டு நிறைவு விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குமரி மாவட்டம் அழிக்கால் கிராமத்தில் சிறு தூண்டில் வளைவுகள் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறி வித்தார். பாதிப்புக்கு காரணமான முட்டம் ஜேப்பியார் துறைமுகத்துக்கு சாதகமான வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு இதுவரை நடைமுறைப் படுத்தப்படவில்லை. இரண்டு மாதங் களுக்கு முன்பு கடல்நீரும் மணலும் அழிக்கால் கிராமத்துக்குள் புகுந்து வீடுகளை நிறைத்தன. இன்றுவரை அவற்றை முழுமையாக அப்புறப் படுத்த தமிழக அரசு முன்வரவில்லை. கடல்நீர் ஊருக்குள் புகாமல் தடுக்கவும் முன்வரவில்லை. இந்த உண்மைகளை மறைத்து கேரள அரசின் மீது அமைச்சர் குறை கூறுவது கோபுர விளக்கில் கல்லெறிவதுபோல் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;