tamilnadu

img

7 பேரை உடனடியாக விடுதலை செய்க: சிபிஐ

சென்னை,பிப்.12- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை யில் இருந்து வரும் பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 7 பேர்களை விடுதலை செய்வது என தீர்மா னித்து தமிழ்நாடு அமைச்சரவை 2018 செப்டம்பர் 9ஆம்  தேதி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

அரசியல் அமைப்பு சட்டப்படி மாநில அமைச்ச ரவை, சட்டப்பேரவை தீர்மானங்கள் மீது ஆளுநருக்கு கருத்து எதுவாயினும் இறுதியில் அமைச்சரவை முடிவை ஏற்க வேண்டியது ஆளுநரின் பொறுப்பாகும். அரசியலமைப்பு சார்ந்த கடமைப் பொறுப்பை  நிறை வேற்றாமல் ஆளுநர் கிடப்பில் போட்டிருப்பதையும், மாநில உரிமையை நிலைநாட்ட வேண்டிய தமிழ்நாடு அரசும், அமைச்சரவையும் ஆளுநரின் சட்ட அத்துமீற லுக்கு மௌன சாட்சியமாகியிருப்பதை யும் உச்சநீதி மன்றத்தின் உத்தரவு வெளிப்படுத்தியுள்ளது.

மக்களால் தேர்வு செய்யப்பட்டு அரசின் முடிவை நிறைவேற்றும் முறையில் மாநில அரசு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்களையும் உடனடியாக விடுதலை செய்ய  வேண்டும் எனவும், ஆளுநரின் அத்துமீறல் குறித்து உச்ச நீதிமன்றத்தில் உரிய சட்டப் போராட்டம் நடத்தி மாநில  அரசின் உரிமையை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

;