tamilnadu

img

சிபிஎம் மாநிலக் குழு அலுவலகத்தில் கம்யூனிஸ்ட் அறிக்கை வாசிப்பு

கம்யூனிஸ்ட் அறிக்கை வாசிப்பு இயக்கம் வெள்ளியன்று உலகம் முழுவதும் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை தி.நகரில் உள்ள மாநிலக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது.

சென்னை, பிப்.21- 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி மாமேதைகள் காரல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் முதன் முதலில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை யின் முதல் பதிப்பை லண்டனில் வெளி யிட்டனர். உலகின் பெரும்பாலான நாடு கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி யுள்ள இந்த காலகட்டத்தில் அதற்கு தீர்வு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை யில்தான் உள்ளது என்ற அடிப்படை யில் பிப்ரவரி 21ஆம் தேதி கம்யூ னிஸ்ட் கட்சி அறிக்கையை ஜப்பானில் இருந்து சிலி நாடு வரை வாசிப்பது என டிரை காண்டிநெண்டல் இண்டர்நேஷ னல் மாநாட்டில் முடிவு செய்யப்பட் டது.

அதனடிப்படையில் கம்யூனிஸ்ட் அறிக்கை வாசிப்பு இயக்கம் வெள்ளி யன்று உலகம் முழுவதும் நடை பெற்றது. அதன் ஒருபகுதியாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை தி.நகரில் உள்ள மாநிலக் குழு அலுவலகத்தில் வீ.பா.கணேசன் தலைமையில் வாசிப்பு இயக்கம் நடைபெற்றது. அலுவலகக் கிளை செயலாளர் சரவணன் வரவேற்றார். மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் அறிக்கை குறித்து அறிமுக உரையாற்றினார். இதில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், மார்க்சிய அறிஞர் மு.சிவ லிங்கம்,  மாநிலக் குழு உறுப்பினர் க. நாகராஜன், பா.சுந்தர்ராஜன், அலு வலகச் செயலாளர் வில்சன், விஜய லட்சுமி, வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கம்யூனிஸ்ட் அறிக்கையை வாசித்தனர். மத்தியக் குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி., வாசிப்பு இயக்கத்தை நிறைவு செய்து பேசி னார். தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 10 ஆயி ரம் இடங்களில் வாசிப்பு இயக்கம் நடை பெற்றது.

;