tamilnadu

img

இராமேஸ்வரம்: மீனவர் கடலில் விழுந்து பலி

இராமநாதபுரம், நவ.2- இராமேஸ்வரம்  கரையூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த கரை வலை மீன்பிடி தொழில் செய்து வருபவர் மீனவர் பிரகாஷ்(25) சனிக்கிழமை தனுஷ்கோடி சாலையில் உள்ள ஒத்த தாளை பகுதியில் மீன்பிடிக்கச் சென்றுள்ளர். மீன்பிடித்துக் கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக கடலோர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவரு கின்றனர். உயிரிழந்த மீனவருக்கு மனைவி, இரண்டுகுழந்தைகள் உள்ளனர்.

;