tamilnadu

img

வேலையிழந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிடுக

மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜூலை 20- கொரோனா ஊரடங்கினால் வேலை யிழந்த குடும்பத்திற்கு ரூ,7,500 நிவாரணமாக வழங்கிடக்கோரி பள்ளிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை யிழந்து, வருமானமின்றி துன்பப்படும் சூழலில் தனியார் நுண் நிதி நிறுவனங்கள் கடன் தவணை கேட்டு மிரட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். கொரோனாவால் வேலை யிழந்த குடும்பத்திற்கு மாதம் ரூ.7 ஆயிரத்து  500 நிவாரண உதவியாக வழங்க வேண்டும். ரேசன் கடையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் ஆறு மாதத்திற்கு இலவ சமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பள்ளி பாளையம் பேருந்து நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய குழு செயலாளர் ஆர்.ரவி தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி,  மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோ கன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.