tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் நியமன பதவி வழங்குக

சென்னை, செப்.20- மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் நியமன பதவி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கத்தின் மாநிலக்குழு ஒகே னக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து  சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சி ராணி, மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். நம்புராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு உள்ளாட்சி அமைப்பு களில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்க வேண்டும். உலக மக்கள்  தொகையில் 15 சதவீதம் பேர் மாற்றுத்திற னாளிகளாக உள்ளதாக ஐக்கிய நாடுகள்  சபை தெரிவித்துள்ளது. 21 வகை மாற்றுத்திற னாளிகளை மத்திய அரசு சட்டப்படியாக அங்கீகரித்துள்ளது. அதனடிப்படையில் நாடு  முழுவதும் சுமார் 10 கோடி மற்றும் தமிழ கத்தில் 45 லட்சத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், மத்திய-மாநில அரசுகளிடம் இது குறித்த முழுமையான, உறுப்படியான எந்த கணக்கீடும் இல்லை. மிகக் குறைவான  எண்ணிக்கையிலேயே மாற்றுத்திறனாளிகள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்க ளாக உள்ளனர். பெரும்பாலான அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் அதிகார வர்க்கத்தி னருக்கு மாற்றுத்திறனாளிகள் பிரச்சனைகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்பது எதார்த்த அனுபவமாக உள்ளது.  மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் பிரதி நிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கை மாற்றுத்திறனாளிகள் தொடர்ச்சியாக எழுப்பி வருகின்றனர். எனவே, முதல் கட்டமாக மாற்றுத்திற னாளிகளையும் அரசியல் பங்கேற்பில் இணைப்பதற்கு தமிழக அரசு மற்ற மாநிலங்க ளுக்கு முன்னுதாரணமாக பல்வேறு மட்ட உள்ளாட்சி அமைப்புகளில் நியமன அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்க உரிய சட்டம் இயற்ற வேண்டும்.

வலிப்பு நோய்-மனநல மருந்துகள்

மன நோயாளிகள், மன வளர்ச்சி குன்றிய  குழந்தைகள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி கள் மன நல பராமரிப்பு, வலிப்பு நோய்க ளுக்கு பெரும்பாலும் வாழ்நாள் முழுவதும் மருந்து,மாத்திரைகள் உட்கொள்ள வேண்டி யுள்ளது. 15 நாள் அல்லது மாதம் ஒரு முறை  இப்படிப்பட்ட கடும் பாதிப்புக்குள்ளான நோயாளிகளை அரசு மருத்துவ மனைகளுக்கு நேரில் அழைத்துச்சென்று காட்டித்தான் மருந்து மாத்திரைகள் வாங்க வேண்டியுள்ளது. ஆனால், இப்படிப்பட்ட சிகிச்சைகளுக்கு தேவையான  சில வகை மருந்து மாத்திரைகள் மட்டுமே அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளில் கிடைக்கின்றன. இங்கும்கூட எல்லா வகை யான மருந்து மாத்திரைகள் கிடைப்ப தில்லை. சென்னை பெருநகரில் உள்ள புறநகர் மருத்துவமனைகளில்கூட இப்படிப்பட்ட மருந்து மாத்திரைகள் தற்போது கிடைப்ப தில்லை. சப்ளை இல்லை என மருத்து வர்கள் தெரிவிக்கின்றனர். இதனால்,  பாதிப்புக்குள்ளான மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளா கின்றனர். எனவே, முன்னுரிமை அடிப்படை யில் அனைத்து மருத்துவமனைகளிலும் இம்மருந்து, மாத்திரைகள் கிடைக்க தமிழக அரசும், சுகாதார துறையும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
 

;