tamilnadu

img

ரூ.3 கோடியை நெருங்கும் அபராத வசூல்

சென்னை, ஏப்.25 - ஊரடங்கை மீறியதாக தமிழ்நாடு முழுவதும் வசூலிக்கப்பட்ட அபராத தொகை மூன்று கோடி ரூபாயை நெருங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனை மீறி நடப்போர் மீது காவல்துறை வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஊரடங்கை மீறியதாக கடந்த 28 நாள்களில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 975 வழக்குகளை பதிவு செய்து, 2 லட்சத்து 99 ஆயிரத்து 108 பேரை கைது செய்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 52 ஆயிரத்து 943 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள் ளன. அபராதமாக 2 கோடியே 91 லட்சத்து 38 ஆயிரத்து 654 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.