சென்னை,ஏப்.1- கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது. இதனால் முறைசாரா தொழிலாளர்கள், நடை பாதைவியாபாரிகள்,. தினக்கூலிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அரசு நிதி யுதவி செய்ய முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஆசி ரியர்கள், அரசு ஊழியர்கள், அரசியல் கட்சியினர் உதவி செய்து வருகின்றனர். இந்த சமூக அக்கறை யில் ஓய்வூதியர்களும் பங்கேற்கிறார்கள்.
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் மாநிலத்தலைவர் நெ.இல. சீதரன், பொதுச்செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 42 ஆயிரம் ஓய்வூதி யர்கள் ஒருநாள் ஓய்வூதியத்தை மாதாந்திர ஓய்வூ தியத்தில் இருந்து பிடித்துக்கொள்ள சம்மதிப்ப தாக தெரிவித்துள்ளனர். இதனை கொரோனா துயர்துடைப்பு நிவாரணப்பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளுமாறும் அவர்கள் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.