tamilnadu

img

ஊதிய பிடித்தம் இல்லை: இயக்குநர்

சென்னை, ஜூலை 29- கிராம சுகாதார செவிலியர்க ளின் போராட்டத்தையடுத்து, ஊதி யம் பிடித்தம் செய்ய மாட்டோம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் உறுதிமொழி அளித் துள்ளார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் தகவல்களை சரியாக பதிவு ஏற்றாத செவிலியர்களின் ஊதி யம் பிடித்தம் செய்யப்படும் என்று  அண்மையில் ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்களன்று (ஜூலை 29) சென்னை தேனாம் பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு நடத்தினர். தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் நடத்திய இந்தப்போராட்டத்தில், 2018 அக்டோபர் மாதம் பணியிட  மாறுதல் பெற்ற செவிலியர்களை  பணியிலிருந்து விடுவிக்க வேண்டும், கர்ப்பம் மற்றும் குழந்  தைகளின் கூட்டு கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு (பிஐசிஎம்இ-பிக்மி) திட்ட தகவல்கள் பதி வேற்றுவதில் உள்ள குளறுபடி களை சரி செய்ய வேண்டும். ஒரு  செவிலியரால் 30க்கும் மேற்பட்ட  பதிவேடுகளை பராமரிப்பது சாத்தியமற்றதாக உள்ளதால் மாநிலம் முழுவதும் ஒரேமாதிரி யான 10 பதிவேடுகளை மட்டும்  பராமரிக்க ஆணையிட வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தினர்.

காலியாக உள்ள பணியிடங் களை நிரப்ப வேண்டும், அதிகாரி களின் அச்சுறுத்தல், பழிவாங்கல்  நடவடிக்கைகளை கைவிட வேண்டும், மாலை 5 மணிக்கு  மேல் ஆய்வுக் கூட்டம் நடத்து வதை ரத்து செய்ய வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கை களையும் முழக்கங்களாக எழுப்பி னர். இதனிடையே பொது சுகா தாரத்துறை இயக்குநர் குழந்தை சாமி, சங்கத் தலைவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். இப்பேச்சுவார்த்தையில், கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட இயக்குநர், மகப்பேறு  நிதியுதவி திட்டத்தில் செவிலி யர்கள் சம்பளம் பிடித்தம் செய்ய  மாட்டோம், பிக்மி எளிமைப்ப டுத்தி தரப்படும், இடமாறுதல் பெற்ற செவிலியர்கள் ஒரு  வாரத்திற்குள் விடுவிக்கப்படு வார்கள், பதிவேடு பராமரிப்புக் குழுவுடன் ஆலோசித்து பதி வேடுகளை குறைக்க நடவ டிக்கை எடுக்கப்படும், அச்சு றுத்தும் அதிகாரிகளுக்கு அறி வுறுத்தல் வழங்கப்படும், காலிப் பணியிடங்கள் அக்டோபர் மாதம்  நிரப்பப்படும் என்று உறுதி யளித்ததாக சங்கத்தின் தலைவர் சி.பரமேஸ்வரி கூறினார். இப்போராட்டத்தில் தமிழ்  நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்  செயலாளர் மு.அன்பரசு, மாநிலச் செயலாளர் சி.ஆர்.ராஜ்குமார், மகளிர் துணைக்குழு மாநில அமைப்பாளர் என்.மணிமாலா, மாவட்டச் செயலாளர்கள் ச. டேனியல் ஜெயசிங் (தென் சென்னை), ஜெ.பட்டாபி (வட சென்னை), சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் பி.சுந்த ரம்மாள், செவிலியர் சங்க பொதுச் செயலாளர் ஆர்.பாண்டி யம்மாள், பொருளாளர் பி.செந்தா மலர் உள்ளிட்டோர் பேசினர்.