tamilnadu

img

ஊரடங்கை மீறி கூட்டம் சேர்த்த எம்.பி. மீது வழக்கு

இடுக்கி, மே 2- கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்கான ஊரடங்கு நிபந்தனைகளை மீறிய இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இடுக்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைராலஜி ஆய்வகம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் டீன் குரியாகோஸ் தலைமையில் வெள்ளியன்று காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் நடத்தினர். 

கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்கான நிபந்தனைகளையும், ஊரடங்கு உத்தரவை மீறியதாகவும் எம்.பி. உள்ளிட்ட 15 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதுபோல் காங்கிரஸ் கட்சியின் ஐ கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அடூர் பிரகாஷ் தலைமையில் நெடுமங்காடு காவல் நிலையம் முன்பு கூட்டம் நடத்தினர். 

இந்த கூட்டங்களில் ஊரடங்கு நிபந்தனைகளை மீறி எம்பி உட்பட பலர் பங்கேற்றனர்.  இதற்கு போட்டியாக காங்கிரஸ் ஏ கோஷ்டியினர் வழக்கறிஞர்கள் சங்கம் என்கிற பெயரில் நீதிமன்ற வளாகத்தில் மற்றொரு கூட்டம் நடத்தினர்.  பொது நலனுக்கு எதிராகவும் ஊரடங்கை மீறியும் கூட்டம் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு சிபிஎம் வலியுறுத்தி யுள்ளது.