tamilnadu

img

கால நீட்டிப்பு செய்து முழுமையாக வழங்க உத்தரவிடுக!

முதல்வருக்கு கோரிக்கை - மாற்றுத்திறனாளிகள் கொரோனா வாழ்வாதார நிதி


சென்னை,ஆக.11- மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோ னா வாழ்வாதார நிதி ஆயிரம் ரூபாயை கால நீட்டிப்பு செய்து முழுமையாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சருக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மனு அனுப்பியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின்  மாநிலத் தலைவர் பா. ஜான்ஸிராணி, பொதுச்செய லாளர் எஸ். நம்புராஜன் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

கொரோனா ஊரடங்கு வாழ்வாதார நிதியாக அடையாள சான்று பெற்றுள்ள சுமார் 13 லட்சத்து 35 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய்  வீடு  வீடாக சென்று வழங்க ஜுன் மாதம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டார்.  பெரும்பாலான மாவட்டங் களில் ஜுன்-25 ஆம் தேதியில் இருந்து வரு வாய்த்துறை மூலம் பட்டுவாடா செய்யப் பட்டன.  சென்னையில் மாநகராட்சி மூலம் மிகவும் தாமதமாக ஜூலை 10 தேதியில் இருந்துதான் வழங்கப்பட்டன.  ஆனால், இரண்டு மாதங்களாகியும் மாநிலம் முழுவதும் அடையாளச் சான்று  வைத்துள்ள சரிபாதி மாற்றுத்திற னாளிகளுக்கு மட்டுமே, அரசு அறிவித்த கொரோனா வாழ்வாதார நிதி ஆயிரம் ரூபாய்  வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையிடம் முழுமையான முகவரி இல்லாதது,  வீடு வீடாக சென்று பட்டு வாடா செய்ய போதிய நிதியை கீழ்மட்ட அதிகாரிகளுக்கு வழங்காதது, உள்ளிட்ட வை காரணங்களாக சொல்லப்படு கின்றன.  

சென்னையில் அனைத்து மண்டலங் களிலும் முறையாக வழங்கப்படவில்லை என புகார்கள் உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில், வாழ்வாதாரத்தை இழந்து வாடும் மாற்றுத்திறனாளிகளுக்கு, மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவை களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாயாவது அரசு வழங்க வேண்டுமென கோரிக்கை உள்ள நிலையில்,  தமிழக அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் கூட முழுமையாக வழங்காததால் மாற்றுத்திறனாளிகளும், அவர்கள் குடும்பத்தினரும் பெரும் வேதனையில் உள்ளனர். எனவே, உள்ளாட்சி, வருவாய், மாற்றுத்திறனாளிகள் நலன் உள்ளிட்ட துறைகள் கூட்டாக செயல்பட்டு,  இதுவரை வழங்கப்படாத அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் வீடு வீடாக கண்டறிந்து, அடையாள சான்றுகளுடன் எங்கு வசித்தாலும் உரிய கால நீட்டிப்பு செய்து வழங்கிட முதலமைச்சர் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

;