சென்னை,பிப்.10- ஏப்ரல் மாத இறுதியில் நகர்ப்புற உள் ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற வாய்ப் புள்ளதாக, அதிமுக நிர்வாகிகள் ஆலோச னைக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாக தகவல் வெளியாகி யுள்ளது. சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதி முக தலைமை அலுவலகத்தில் ஒருங்கி ணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஏப்ரல் மாத இறுதி யில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடை பெறலாம் என்பதால் நிர்வாகிகள் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அப்போதே ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடை பெறாத 9 மாவட்டங்களுக்கும் சேர்த்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.