tamilnadu

img

உரிமைக்குழு நாளை கூடுகிறது

சென்னை,மார்ச் 9- தமிழக சட்டப்பேரவையின் உரிமைக் குழு கூட்டம் வரு கிற புதன்கிழமை (மார்ச் 11) தலைமைச் செயலகத்தில் நடை பெறுகிறது.  சட்டப் பேரவை துணைத் தலைவரும் உரிமைக் குழு  தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், நியூஸ் - 18, புதிய தலைமுறை தொலைக்காட்சிகள் மீது மின்  துறை அமைச்சர் தங்கமணி கொடுத்துள்ள உரிமை மீறல்  புகார் குறித்த மேல் நடவடிக்கை பற்றி முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.