tamilnadu

4.25 லட்சம் குட்கா பறிமுதல்

கிருஷ்ணகிரி, ஆக. 11- கிருஷ்ணகிரி அருகே 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி காவல்  துறையினர் செவ்வாய்க்கிழமை (ஆக.11) அதிகாலை  பந்தாரப்பள்ளி என்ற இடத்தில் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த வேனை மடக்கினர். காவல் துறையி னரைக் கண்டதும், வேன் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். காவல்துறையினர் வேனை சோதனை செய்த  போது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட 4 லட்சத்து  25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து குட்கா மற்றும் வாகனத்தை  காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும்  வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய வேன் ஓட்டுநரை  தேடி வருகின்றனர்.