tamilnadu

img

கொரோனா பணிக்காக நியமிக்கப்பட்ட ஆய்வக பரிசோதனை ஊழியர்கள் ஊதியமின்றி தவிப்பு

குடவாசல்:
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா சுகாதார பணிக்காக ஆய்வக பரிசோதனை பணியாளர்களாக, தமிழக அரசின் நேரடி பணி உத்தரவு அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களுக்கு இது நாள் வரை ஊதியம் வழங்காமல் இருப்பதால் தினந்தோறும் வாழ்வாதாரத் தேவைக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பில்உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர்  ஜி.சுந்தரமூர்த்தி விடுத்துள்ள அறிக்கை:

தமிழ்நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தை கணக்கில் கொண்டு சுகாதார பணிக்காக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆய்வக பரிசோதனை ஆய்வாளர்கள் உள்ளிட்டவர்கள் மருத்துவ சேவைக்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்படி நேரடி பணியாளராக தமிழகம் முழுவதும் கடந்தஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இப் பணிக்கு தகுதியான வர்கள் அமர்த்தப்பட்டனர். இது அனைவராலும் வரவேற்கப்பட்டது. இந்த நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இருந்து ஆய்வக பரிசோதனை ஆய்வாளர்கள் (லேப் டெக்னீசியன் )அரசு  உத்தரவுப் படி ஆய்வக பணியாளர்கள் 25 ஊழியர்கள் பணி நியமனம் பெற்று திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நீடாமங்கலம், வலங்கைமான் உள்ளிட்ட மற்றும் பல தாலுக்காவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனை நிலைய ஆய்வாளர்களாக அரசின் ஆணைப்படி பணியில் இணைந்து கொரோனா பாதிப்பு காலத்திலும் தங்களின் உயிரை பற்றி கவலைப்படாமல், மருத்துவப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இவர்கள் பணிக்கு வந்த ஏப்ரல் மாதம் முதல் கொண்டு, ஏப்ரல்,மே,ஜூன் மாதம் கடந்து ஜூலை மாதம் துவங்கியும், இதுநாள்வரை ஊதியம் வழங்கவில்லை. ஒப்பந்த அடிப்படையிலான மாத ஊதியம் ரூ.8000ஆகும். இந்த குறைந்தபட்ச ஊதியம் கூட மாதம், மாதம்  அவர்களுக்கு இதுநாள் வரையில் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருந்து வந்து இங்கு பணிபுரியும் அவர்களுக்கு இதுநாள் வரை அரசு அறிவித்த ஊதியம் ரூ. 8000 கிடைக்காமல் அன்றாடச் செலவுக்கு கூட வழியின்றியும்,வாடகைக்கு தங்கியுள்ள இடத்திற்கு வாடகை கொடுக்க முடியாமல்,என்ன செய்ய போகிறோம் என்ற தவிப்பில் தினந்தோறும் பணிக்கு சென்று வருகின்றனர். தங்களின் இந்த நிலையை யாரிடம் சொல்லி துயரத்தை பகிர்ந்து கொள்வது என்று கூட தெரியாமல்கவலையிலும் உள்ளனர். எனவே அரசு உத்தரவு அடிப்படையில் ஒரு மாதத்திற்கான ஊதியம் ரூ.8000 வீதம் கணக்கிட்டுதற்போது வரை நிலுவையில் உள்ள தொகையை உடனேவழங்க வேண்டும். கொரோனா காலத்தில் தங்கள் உயிரைப்பற்றி கூட கவலையின்றி சுகாதாரப் பணியில் ஈடுபடும் இவர்களின் வாழ்வாதாரத்தை காக்க சம்பளத்தை வழங்கிட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;