tamilnadu

img

கேரள சட்டமன்றம் தீர்மானம்

குடியுரிமை திருத்த சட்டத்தை உடனே ரத்து செய்க!

திருவனந்தபுரம், டிச.31- இந்திய மக்கள் மீது  மத்திய அரசு திணித்துள்ள ‘குடியுரிமை திருத்த சட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்’ என செவ்வாயன்று நடை பெற்ற கேரள சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்க கேரள சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் இந்த தீர்மானத்தை முதல்வர் பினராயி விஜயன் முன்மொழி ந்தார். தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா, பாஜக உறுப்பி னர் ஓ.ராஜகோபால் உட்பட 8 பேர் பேசினார்கள். விவாதத்திற்கு பதி லளித்து முதல்வர் பினராயி விஜயன் பேசினார்.

அதைத் தொடர்ந்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதை சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் அறிவித்தார்.   முன்னதாக முதல்வர் பினராயி விஜயன் தனது பதிலுரையின்போது கூறியதாவது: மத்திய அரசு ஒரு உத்தரவின் மூலம் இந்த சட்டத்தை ரத்து செய்ய முடியும். நாட்டில் உள்ள மக்களின் பாது காப்பின்மையை கருத்தில் கொண்டு எவ்வளவு விரைவாக அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியுமோ அதை செய்ய வேண்டும். நாட்டில் ஏராளமான அரசியல் கட்சிகள் உள்ளன. அதுபோன்றதல்ல பாஜக. அவர்கள் ஆர்எஸ்எஸ் என்கிற அமைப்பின் நோக்கங்களை ஏற்றுக் கொண்டவர்கள். ஜெர்மனியில் ஹிட்லர் செயல்படுத்தியவற்றையே தமது நோக்கமாக ஆர்எஸ்எஸ் அங்கீ கரித்துள்ளது. அவர்களது அமைப்பு முறை முசோலினியுடையது. அத்த கைய நோக்கங்களை ஏற்றுக்கொண்ட வர்களின் தலைமையை அங்கீகரிக்கும் பாஜகவிடம் அதிகாரம் கிடைத்ததும்  ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை அமல்படுத்துகிறார்கள்.    சங்பரிவாரத்தின் நிகழ்ச்சி நிரல் இந்தியாவில் பெரும்பான்மையான மக்களை இரண்டாம்தர குடிமக்களாக பிரித்து மிரட்டல் விடுத்து, அம்மக்களின் உறுதியை குலைப்பதாகும். இதை நாம் ஒன்றுபட்டு எதிர்க்கவில்லை என்றால் நாடு மேலும் ஆபத்தான நிலைக்கு செல்லும். இந்த நிகழ்ச்சி நிரல்தான் குடியுரிமைப் பிரச்சனையில் மேலோங்கி வருகிறது. இதை எதிர்க்கா மல் போனால் இத்தகைய நிகழ்ச்சி  நிரல்கள் ஒவ்வொன்றாக நமது நாட்டில் வெளிப்படும். இதைப்புரிந்துகொண்டு தலையிட்டாக வேண்டும். மதச்சார் பின்மையை பாதுகாக்க குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அணி திரள வேண்டும்.

முத்தலாக்கிலும் ஜம்மு - காஷ்மீர் பிரச்சனையிலும் ஒரு பகுதியினரை விலக்கி வைத்ததை நாம் பார்த்தோம். குடியுரிமை திருத்தச் சட்டத்திலும் அது தான் நோக்கம். அனைத்து தரப்பிலும் உள்ளவர்களின் திருமண ரத்து வழக்கு கள் சிவில் சட்ட வரம்புக்குள் வரும் போது முத்தலாக் மூலம் ஒரு பகுதி யினருக்கு மட்டும் குற்றவியல் வரம்புக் குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நமது நாட்டில் 13 மாநிலங்களுக்கு சிறப்பு அதிகாரம் உண்டு. ஆனால் ஜம்மு - காஷ்மீருக்கு மட்டும் அந்த சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டது. மத்திய ஆட்சியாளர்கள் எதையும் செய்யலாம் என்கிற சூழல் தற் போது உள்ளது. முஸ்லிம்கள் பெரும் பான்மையாக உள்ள மாநிலத்தில் சட்டத் தின் 370ஆவது பிரிவை நீக்கும்போது, மணிப்பூரிலும் நாகாலாந்திலும் அதி காரம் அளிக்கப்படுகிறது. மதரீதியான பாகுபாட்டை இங்கெல்லாம் காண முடிகிறது. குடியுரிமை திருத்தம் ஏற்கனவே செய்யப்பட்டபோது போராட்டங்கள் நடக்கவில்லை என்றால் அது இத்த கைய நிகழ்ச்சி நிரலின்படி செய்யப் பட்டதல்ல. 1955இல் அந்த திருத்தம் கொண்டுவரப்பட்டது. அரசமைப்பு சட்ட த்தை முன்னிறுத்தி அதன் நோக்கங் களை அங்கீகரித்து அந்த திருத்தம் செயல்பாட்டுக்கு வந்தது. பின்னர் 1985,2004, 2005 ஆண்டுகளில் சில திருத்தங் கள் செய்யப்பட்டன.

1985இல் அசாம் உடன்பாடுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்ய திருத்தம் செய்யப்பட்டது. 2004இல் வெளிநாட்டி னருக்கு குடியுரிமை வழங்குவது தொடர் பான கால வரையறை செய்வதற் காகவும், 2005இல் இந்திய வம்சாவளி யினரான இந்தியர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்காகவும் திருத்தம் செய்யப்பட்டது. ஆனால், இந்த திருத்தங்களில் மத அடிப்படையிலான பிரிவினையோ, குடியுரிமை மறுக்கும் பார்வையோ இல்லை. எனவே, இந்த திருத்தங் களுக்கு நாடு முழுவதுமான எதிர்ப்பு எழவில்லை. இவ்வாறு முதல்வர் கூறினார்.

;