tamilnadu

img

மார்க்சியக் குழந்தைகள்

  • சேலத்தில் திங்களன்று நடைபெற்ற மாமேதை காரல் மார்க்ஸ் சிலைதிறப்பு விழாவில், தமிழ்நாடு பாலர் சங்கத்தின் சார்பில் மார்க்ஸ் வேடமணிந்து குழந்தைகள் வந்தனர். இது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. காரல் மார்க்ஸ் சிலை பீடம் அலங்கார ஏற்பாடுகளை சேலம் மாநகர் மேற்கு குழுவினர் செய்திருந்தனர்.
  • மார்க்ஸ் முகமூடி அணிந்து நங்கவள்ளி ஒன்றிய குழு சார்பாக பொதுக்கூட்ட மேடை வரை பேரணியாக வந்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் வடக்கு மாநகரக் குழு சார்பில் ‘மார்க்ஸ், ஏங்கல்ஸ் செல்பி பிரேம்’ செய்யப்பட்டு காட்சிப்படுத்தினர். இதில் சிலைதிறப்பு விழாவிற்கு வந்தவர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 
  • கடந்த 2006ஆம் ஆண்டு கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த பிரகாஷ் காரத் சேலத்தில் உணவு, வேலை, நிலம் கேட்டு சிறப்பு பிரச்சாரத்தில் பங்கேற்றார். அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் அடங்கிய மூன்று குறுந்தகடு தொகுப்பை சேலம் சிபிஎம் மாநகர கிழக்கு குழு உறுப்பினர் ஜி.சுல்தான் பொதுக்கூட்ட மேடையில் பிரகாஷ்காரத்திடம் வழங்கினார்.