tamilnadu

img

கொரோனா பலி சீனாவை முந்தியது இந்தியா

மதுரை, மே 29- கொரோனா உயிர்ப்பலியில் சீனாவை பின்னுக்குத் தள்ளியது இந்தியா. வோல்ட் மீட்டர் (வெள்ளிக்கிழமை) தகவல்படி சீனாவில் 82,995 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,634 பேர் பலியாகியுள்ளனர். இந்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி 1,65,799 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 71,106 பேர் குணமடைந்துள்ளனர். 4,706 பேர் பலியாகியுள்ளனர். ஒப்பீட்டளவில் சீனாவைவிட இந்தியாவில் 72 பேர் அதிகம்  பலியாகியுள்ளளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 59,546 பேர்   பாதிக்கப்பட்டுள்ளனர். இம் மாநிலம் முதலிடத்தில்  உள்ளது. இரண்டாமிடத்தில் தமிழகம் உள்ளது. 19,372 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாமிடத்தில் தில்லி உள்ளது. இங்கு 16,281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாமிடத்தில் உள்ளது. 145 பேர் பலியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா சமூகப்பரவலை அடையவில்லை என தமிழக அரசு திட்டவட்டமாகக் கூறுகிறது.

;