tamilnadu

img

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு :அமைச்சர்

கோபி:
ஈரோடு மாவட்டம், கோபிச் செட்டிப்பாளையத்தை அடுத்த நம்பியூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது” என்றார்.

செப்டம்பர் மாதம் இறுதி வரை அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஐந்து நாட்களுக்கு மட்டுமே ஆன்லைன் வகுப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, அதன் பிறகு வழக்கம்போல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்.அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வழி பாடம் கற்பிக்க பாடத்திட்டம் தயாரிக்கப்படுகிறது. புதிய கல்வி கொள்கை குறித்து தமிழக அரசின் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இரு மொழி கொள்கையே தொடரும். கூடுதல் மாணவர்களுக்கு தேவையான வகுப்பறைகளும், ஆசிரியர்களும் அரசு பள்ளியில் உள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும். புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக அரசின் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கூடுதல் மாணவர்களுக்கு தேவையான வகுப்பறைகளும், ஆசிரியர்களும் அரசு பள்ளியில் உள்ளனர் என்றும் செங் கோட்டையன் கூறினார்.

;