தமிழகத்தில் கொரோனா வால் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தமிழகம் சமூக தொற்று அடைந்து விட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் செய்தியாளர்க ளை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பிலா ராஜேஷ் இதுகுறித்து கூறுகையில், “ தற்போதுவரை தமிழ்நாடு இரண்டாவது நிலையில் தான் உள்ளது. மூன்றாவது நிலைக்குச் செல்லவில்லை" என்றார்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட வர்களின் வீட்டு அருகே 8 கி.மீ. சுற்றளவில் தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த கட்டுப்படுத்துதல் திட்டத்தில் 12 ஆயிரம் களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் மூலம் 9 லட்சத்து 22 ஆயிரத்து 860 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதுவரை அதிக மூச்சுத் திணறல் உள்ள 650 பேருக்கு சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக் காக எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
தமிழகம் கொரோனா வைரஸ் தாக்கத்தில் தற்போது 2-வது நிலையில் தான் உள்ளது. மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட வர்களிடம் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த கண்காணிப்பில் தான் சமூக தொற்று இருக்கிறதா? இல்லையா? என்று தெரியவரும் எனக்கும் சுகாதாரத் துறைச் செயலாளர் தெரிவித்தார்.