tamilnadu

img

பொதுவேலை நிறுத்தம்...ஆர்.வைகை, மூத்த வழக்கறிஞர்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மத்திய அரசும், பாஜகவும் எதிர்பார்க்காத அளவிற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்கு மூலஊற்று நாட்டு மக்களிடத்திலும், அரசியலமைப்பு சட்டத்திலும் ஊறிப்போயுள்ள மதச்சார்பின்மையும், பழக்க வழக்கங்களும்தான் காரணம். அரசாங்கம் எந்த ஒரு செயலிலும் மதத்தை நுழைக்கக்கூடாது என்று அரசியலமைப்பு சட்டம் வரையறுத்துள்ளது. அதை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுகள்  பல தீர்ப்புகளில் தெளிவுபடுத்தி உள்ளன.  இந்தியாவை இந்துத்துவா நாடாக மாற்றி, இஸ்லாமியர்களை இரண்டாம்தர குடிமக்களாக இருக்கச் செய்வதுதான் பாஜகவின் நிலைபாடு. அதற்கேற்ப செயல்படுகிறார்கள். பாஜக-வின் கொள்கை, பின்னணியை மறந்து சட்டத்தை மட்டும் தனித்துப் பார்க்க முடியாது. பாஜகவின் கொள்கையை அமல்படுத்த இந்திய மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து பொதுவேலை நிறுத்தம் செய்ய அரசியல் கட்சிகள் முயற்சிக்க வேண்டும்.

;