tamilnadu

img

கொரோனா சவாலை ஒன்றுபட்டு முறியடித்திட அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுக!

முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் மீண்டும் கடிதம்

சென்னை, ஏப்.6- தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திங்களன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். கடிதம் வரு மாறு: கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள் ளது. இதுவரை தமிழகத்தில் சமூகத் தொற்று ஏற்படவில்லை என்பது பெரும் ஆறுதலாக உள்ளது. ஆனால் அதேசமயம் அடுத்த சில நாட்களில் தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமானால் ஊரடங்கு உத்த ரவை மேலும் நீடிக்கும் வாய்ப்பு உள் ளதாக கருத்துக்கள் தெரிவிக்கப்படு கின்றன.

மக்கள் மத்தியில் அச்சம்

இந்நிலையில் தற்போது ஊர டங்கு உத்தரவு காரணமாக மக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. இதைத் தவிர வேறு வழி இல்லை என்ற போதிலும் வீட்டில் இருக்கும் மக்கள் சந்திக்கும் பிரச்ச னைகளுக்கு அரசு உரிய நிவாரணம் மற்றும் தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில் சாதாரண மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் ஆபத்தான நிலைமை ஏற்படும் என்பதை தங்களது கவனத்துக்கு தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக தற்போது மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு அதன் காரணமாக விலைகள் அதி கரித்து வருகின்றன. அடுத்த சில நாட்களில் பொருட்கள் கிடைக்குமா என்கிற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

விவசாயிகள் பெருந்துயரம்

இன்னொரு பக்கம் விவசாயிகள் மிகுந்த கஷ்டப்பட்டு உற்பத்தி செய் துள்ள பழங்கள், காய்கறிகள், பூக்கள் போன்றவற்றை அறுவடை செய்ய முடியாமல் அழிந்து வரு கின்றன. மா, பலா, திராட்சை, கொய்யா, வாழை சாகுபடிகள் அழிந்து வரு கின்றன. காய்கறிகள், வெங்காயம், முருங்கக்காய் உள்ளிட்டவைகளும் அழிந்து வருகின்றன. பல மாவட் டங்களில் உற்பத்தியான நெல்லை வியாபாரிகள் வாங்காததால் தேங்கிக் கிடக்கின்றன. பால் உற்பத்தியாளர்கள் உற்பத்தியான பாலை சாலையில் கொட்டும் அவல நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு விவசாயிகள் தங்களது உற்பத்தி களை இழப்பதானது அவர்களின் எதிர்காலத்தை இருளாக்கிவிடும். எனவே, விவசாயிகள் உற்பத்தி செய்யக் கூடிய அனைத்து விளை பொருட்களையும் அரசு நேரடியாக கொள்முதல் செய்து தேவையான மக்களுக்கு இலவசமாகவோ அல் லது குறைந்த விலையிலோ விநியோ கிக்க வேண்டும். இதன் மூலம் பொது மக்களின் தேவைகளை ஈடு கொடுப்ப தோடு விவசாயிகளின் வாழ்விற்கும் பாதுகாப்பு அளித்திட முடியும்.

இரண்டாம் கட்ட நிவாரணம் தேவை

ஊரடங்கு உத்தரவு மார்ச் 31 ஆம் தேதி வரை என அறிவிக்கப்பட்ட நேரத் தில் தமிழக அரசு ரூபாய் 1000 நிவாரண மும் மற்ற பொருட்களும் வழங்கப் படும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் மேலும் 21 நாட்களுக்கு ஊர டங்கு நீடித்திருக்கும் நிலையில், இரண்டாம் கட்டமாக அரசு தலா ஒரு குடும்பத்திற்கு 5000 ரூபாயும் உணவுப் பொருட்களையும் இலவசமாக வழங்க வேண்டுமெனற அவசியம் எழுந்துள்ளது.

மருத்துவர்கள் - செவிலியர்களின்  நலன் காத்திட...

அதேபோல அர்ப்பணிப்பு உணர் வோடு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லா மல் மிக ஆபத்தான நிலையில் பணியாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நோய்ப்பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் பல புதிய மருத்துவமனைகளும், ரயில்வே பெட்டிகளும் மருத்துவப் படுக்கைகளாக மாற்றப்படும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு தேவையான வென்டி லேட்டர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் இருப்பதோடு ஏற்கனவே மருத்து வமனையில் உள்ளவர்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை என மருத்து வர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், வரலாறு காணாத ஒரு தேசிய சவாலை எதிர்கொள்ளும் இப்பணியில் மருத் துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியா ளர்கள் மட்டுமின்றி காவல்துறையினர், வரு வாய்த் துறையினர், ஊரக வளர்ச்சித் துறை யினர், மின்சார ஊழியர்கள் உள்ளிட்ட பல் வேறு துறைகளைச் சார்ந்த ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். இவர் களுக்கு அரசு ஒரு மாத சிறப்பு ஊதியத்தை ஊக்க ஊதியமாக அளித்திட வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ளவை மட்டுமின்றி இன்னும் தமிழகத்தில் இருக்கிற தினக்கூலி தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர் கள், கட்டுமானத் தொழிலாளர்கள், மீனவர் கள் உள்ளிட்ட ஏராளமான மக்களின் கோரிக் கைகளையும் அரசினுடைய கவனத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மேற்கண்ட கோரிக்கைகளை அரசினுடைய கவனத்திற்கு எடுத்துச் சொல்ல அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என பலமுறை நாங்கள் வற்புறுத்தி வந்துள்ளோம். இன்றைக்கு ஏற்பட்டுள்ள இந்த தேசிய சவாலை தமிழக அரசு ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் என அனைவரும் சேர்ந்து ஒரே குரலில் பணியாற்றி முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மீண்டும் வற்புறுத்தி கேட்டுக் கொள்கி றேன். மேலும், இப்பிரச்சனைகளை தங்களிடம் நேரில் எடுத்துக்கூறி முறையிடுவதற்கு அடுத்த ஓரிரு தினங்களில் எங்கள் கட்சிக்கு நேரம் ஒதுக்கித்தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.


 

;