tamilnadu

img

இடைத்தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்திடுக

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

சென்னை, அக். 19- அக்டோபர் 21ல் நடைபெறும் விக்கிர வாண்டி மற்றும் நாங்குனேரி தொகுதிகள் இடைத்தேர்தலில் வாக்காளப் பெருமக்கள், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்  பில் போட்டியிடும் தி.மு.க. - காங்கிரஸ் கட்சி  வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெறச்  செய்திட வேண்டும் என்று இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் செயலாளர் இரா. முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில்  மாநில உரிமைகளை பறித்து தமிழ்நாட்டு மக்க ளுக்கு எதிராக செயல்படக் கூடிய மத்திய  அரசுக்கு தக்கபாடம் புகட்டவும், மாநில உரி மைகள் - நலன்கள் குறித்து சிறிதும் கவ லைப்படாமல் தங்களது பதவியை காப் பாற்றிக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் எடப்பாடி அரசுக்கு தக்க பாடம் புகட்டவும், தி.மு.க. - காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டுகிறோம்.

தமிழ்நாடு சட்டப்பேரவை நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரும் இரு  மசோதாக்கள் பேரவையில் ஒரு மனதாக  நிறைவேற்றப்பட்டதை மத்திய அரசு நிராக ரித்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில்  தண்டிக்கப்பட்டு, கடந்த 28 ஆண்டு கால மாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க வேண்டுமென தமிழ்நாடு சட்டப்பேரவை மற்றும் தமிழ்நாடு அமைச்ச ரவை நிறைவேற்றிய தீர்மானங்களை மத்திய அரசு நிராகரித்தது.இவைகளை அரசி யல் ரீதியாக எதிர்கொள்ள மாநில அரசு முன்வராமல் மத்திய அரசின் நயவஞ்சக முடிவுகளை எடப்பாடி பழனிசாமி அரசு  கைகட்டி வாய்ப்பொத்தி ஏற்றுக் கொள்கி றது. கிராமம் முதல் உயர் மட்டம் வரை  ஊழல் கரைபுரண்டு வெள்ளமென பெருக்  கெடுத்து பாய்கிறது. சட்டம் ஒழுங்கு கேள்விக்குரியாகி விட்டது. சிறு கொள்ளை  முதல் பெருங்கொள்ளை வரை தங்குதடை யின்றி நடைபெற்று வருகின்றது. கொள்ளை யர்கள் சிறிதும் அச்சமின்றி செயல்பட்டு வரு கின்றனர்.  தலைமை செயலகத்தில் நான்கு துப்புரவு தொழிலாளர்கள் பணிக்கு, நான்கா யிரம் பொறியியல் படித்த பட்டதாரிகள் விண்ணப்பம் செய்வதன் மூலம், வேலை யின்மை கொடுமை எந்த அளவிற்கு தமிழ கத்தில் உச்சத்தில் உள்ளது என்பதை புரிந்து  கொள்ள முடியும்.விவசாயிகள் - விவசாயத்  தொழிலாளர்கள் பிரச்சனைகள் தீர்ந்த பாடில்லை.இத்தகைய நிலையில் மத்திய, மாநில அரசுகளுக்கு பாடம் புகட்டிட இரு தொகுதிகளிலும் தி.மு.க. - காங்கிரஸ் வேட்பா ளர்களை ஆதரித்து வாக்களித்து வெற்றி பெறச் செய்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

;