சென்னை, ஏப்.12- கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிப்புப் பாதையை பயன்படுத்த வேண்டாம் என, தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி வலியுறுத்தி யுள்ளார். இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலை குறிப்பிட்டு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கிருமிநாசினி தெளிப்பு பாதை கள் பாதுகாப்பு தொடர்பாக மக்களிடையே தவ றான எண்ணத்தை உருவாக்க வாய்ப்புள்ளதோடு, நோய்த்தொற்றை தடுக்கும் கைகளை கழுவும் பழக்கத்திலிருந்து மக்களை திசை திருப்பக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
மேலும், வேதிப்பொருட்களின் கலவையை மக்கள் மீது தெளிப்பது என்பது ஆபத்தான தோடு மட்டுமின்றி பயனற்றது எனவும் தெரிவித்துள் ளார். எனவே, கிருமிநாசினி தெளிப்பு பாதைகளை அமைக்க வேண்டாம், அதை பயன்படுத்தவும் வேண் டாம் என தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி அறிவுறுத்தியுள்ளார்.