முதலமைச்சர் தலையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, ஆக. 5- கொரோனா - ஊரடங்கு கால த்தில் கௌரவ விரிவுரையாளர் களுக்கு ஊதியம் மறுக்கப்பட்டுள் ளது. இப்பிரச்சனையில் முதலமைச்சர் தலையிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழகத்தில் உள்ள 113 கலை மற்றும் அறிவியல், கல்வி யியல் கல்லூரிகளில் இரண்டு சுழற்சிகளிலும் சேர்த்து 4084 கௌரவ விரிவுரையாளர்கள் மிகக் குறைந்த ஊதியமான ரூ. 15,000/-ல் பணியாற்றி வருகின்றனர். கொரோ னா நோய் தொற்று பரவல் மற்றும் ஊரடங்கினால் கல்லூரிகள் விடு முறை அளிக்கப்பட்டுள்ளதால் இவர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. இத னால் இவர்கள் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகி தங்களது குடும்பத் தேவைகளை கூட சமாளிக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கொரோனா நோய்த் தொற்று, ஊர டங்கு ஆகிய காரணங்களால் இவர்கள் தங்களது குடும்பத் தேவை களை சமாளிப்பதற்காக வேறு எங் கும் வேலைக்கு செல்ல முடியாது. இப்பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் உடனடியாக தலை யிட்டு வாழ்வாதாரமின்றி சிரமப் படும் கௌரவ விரிவுரையாளர் களுக்கு, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களுக்கான ஊதி யத்தை உடனடியாக வழங்கிட உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. அதேபோல், தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரி யர்கள், விரிவுரையாளர்கள், ஊழி யர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மூன்று மாதங்களுக்கான ஊதி யத்தை உடனடியாக வழங்கிட தனியார் கல்லூரி நிர்வாகங்களுக் கும் முதலமைச்சர் அறிவுறுத்த வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.