நாகர்கோவில், டிச.24- இந்திய மக்களிடையே மதரீதியாக பிளவை ஏற்படுத்தும் வகையில், மதச் சார்பற்ற இந்திய அரசியலமைப்பு சட்டத் துக்கு எதிராக மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டம் 2019 ஐ கண்டித்து அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் செவ்வாயன்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு திடல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, முஸ்லீம் அமைப்புகளின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் எம்.எ.கான் தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின், சட்டமன்ற உறுப்பினர்கள் சுரேஷ்ரா ஜன், மனோ தங்கராஜ், காங்கிரஸ் எம்பி வசந்தகுமார், காங்கிரஸ் மாநிலத் தலை வர் கே.எஸ்.அழகிரி, எஸ்டிபிஐ மாநில செயலாளர் அகமது நவவி, காங்கிரஸ் நிர்வாகி முகுல் வாஸ்னிக் உள்ளி ட்டோர் பேசினர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.செல்ல சுவாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.