tamilnadu

img

தமிழகத்தில் மீண்டும் 6 ஆயிரத்தை தாண்டிய தினசரி பாதிப்பு...  இன்று 6,352 பேருக்கு கொரோனா தொற்று...

சென்னை 
தமிழக மக்களை தொடர்ந்து மிரட்டி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் இன்று மீண்டும் தனது வழக்கமான உச்சத்தை தொட்டுள்ளது. அதாவது கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 6 ஆயிரத்துக்குள் இருந்த நிலையில், இன்று  (ஆக., 29) மீண்டும் 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 6,352 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,15,590 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 87 பேர் பலியாகிய (அரசு  - 59, தனியார்  - 28) நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 7,137 ஆக அதிகரித்துள்ளது. 6,045 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,55,727 ஆக உயர்ந்துள்ளது. 

மாநிலத்தின் வெளிப்பகுதியில் இருந்து வந்த 26 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இன்னும் 52,726 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

சென்னை நிலவரம்...

இன்றைய பாதிப்பு  - 1,285 

மொத்த பாதிப்பு  - 1,33,173

இன்றைய பலி  - 17 

மொத்த பலி எண்ணிக்கை  - 2,172 

;