tamilnadu

img

நோய் - நெருக்கடியிலிருந்து மக்களை காத்திடுக!

நாடு முழுவதும் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஆக. 26 - கொரோனா நோய்த்தொற்று மற்றும் பொதுமுடக்க நெருக்கடியிலிருந்து மக்களை பாதுகாத்திடக் கோரி  ஆகஸ்ட் 20 முதல் 26 வரை நாடு முழு வதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் எழுச்சியுடன் நடைபெற்றது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் பல்லா யிரக்கணக்கான மையங்களில் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் மத்திய பாஜக அரசு மற்றும் மாநில அரசுகளின் கொரோனா நெருக்கடி கால தோல்வியை அம்பலப்படுத்தி பிரச்சாரம் மேற்கொண்டனர். 

சீத்தாராம் யெச்சூரி

இதனைத் தொடர்ந்து பிரச்சாரத்தின் நிறைவு நாளான புதனன்று (ஆகஸ்ட் 26) நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.  கே.பாலகிருஷ்ணன் கடும் சாடல் தமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் மையங் களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒருபகுதியாக தென்சென்னை மாவட்டம், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநி லக்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: ஊரடங்கு காலத்தில் மத்திய அரசு  20 லட்சம் கோடி ரூபாய் நிவாரண தொகுப்பை அறிவித்தது. அதில் பெரும்  பகுதியை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே கொடுத்தது. ஊரடங்கு நெருக்க டியை பயன்படுத்தி புதிய கல்விக் கொள்கை, தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தம், வேலை நேரம் அதிகரிப்பு, பொதுத்துறை மற்றும் கனிம வளங் களை தனியார்மயமாக்கி வருகிறது. நீட்  போன்ற தேர்வுகளை வைத்து மாணவர் களின் உயிரோடு அரசு விளையாடுகிறது. மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு உருப்படியான ஒரு நட வடிக்கையும் எடுக்கவில்லை. வீட்டி லேயே நோயாளிகளுக்கு சிகிச்சை என தனது பொறுப்பை அரசு தட்டிக்கழிக் கிறது. மாநில அரசு, முகக்கவசம், வெண்டி லேட்டர் வாங்குவது, நோயாளிகளுக்கு உணவு வழங்குவது என அனைத்திலும் ஊழல் செய்கிறது. தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று கூறுவதுபோல அதிமுக அரசு தொட்ட இடமெல்லாம் ஊழலாக உள்ளது. சுகாதாரத்துறை, அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்களின் ஊதியத்தை பறித்துள்ளது. மருத்து வர்கள், செவிலியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தையும் தராமல் உள்ளது. இறந்தவர்கள் எண்ணிக்கை விபரத்திலும் தில்லுமுல்லு செய்கின்ற னர். எத்தனை மருத்துவர்கள் இறந்துள் ளனர் என்ற விவரம் கூட அரசிடம் இல்லை. உண்மையை மறைத்து மக்களை  ஒருபோதும் காப்பாற்ற முடியாது.

மின்கட்டணத்தை பொறுத்தவரை மாதாமாதம் கணக்கிட்டு கட்டணம் வசூலிக்க வேண்டும். ஊரடங்கிற்கு முன்பு  எவ்வளவு தொகை செலுத்தினார்களோ அதேதொகையை வசூலிக்க வேண்டும். அதற்கு மேல் உள்ள தொகையை அரசு  ஏற்றுக் கொள்ள வேண்டும். பொது முடக்க காலத்தில் ஓடாத வாகனங் களுக்கு சாலை வரி கட்டச் சொல்வதை கைவிட வேண்டும். பல்வேறு வகையான கடன்களுக்கான தவணைத்தொகை வசூலிப்பதையும், அபராத வட்டி கோருவதையும் கைவிட வேண்டும். அனைத்து தவணை வசூலையும் ஓராண்டிற்கு ஒத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். சென்னை மதுரவாயல் பகுதிக்குழு, போரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் கலந்து கொண்டார். மேலும் தமிழகம் முழுவதும் மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல் வேலி, சேலம், தஞ்சாவூர், நாகை, விழுப்புரம், திருப்பூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செய லாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 

;