விழுப்புரம், மே 6- தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டத்தின் கிழக்கு எல்லை கிராமங்கள் மற்றும் உள் பகுதி கிராமங்கள் என 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள் புதுச்சேரி மாநில எல்லையோரங்களிலும், பல கிராமங்கள் புதுச்சேரி, தமிழக பகுதிகள் என அடையாளம் காண முடியாத அளவிற்கு ஒன்றோடொன்று இணைந்தே உள்ளன. விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றிய கிராமங்கள் இடையிடையே புதுச்சேரி மாநில கிராமங்களும் அமைந்துள்ளன. இரு மாநில மக்களிடையே நல்ல சுமூகமான நிலை நிலவி வருகிறது.
இந்த பகுதிகளில் ஒரே கிராமத்தில் புதுச்சேரி பகுதியும் தமிழக பகுதியும் உள்ளதால் பொது மக்கள் தங்களது அன்றாட பணி களை செய்ய புதுச்சேரி மாநிலத்தவர் தமிழக எல்லையை கடந்தும் தமிழக மாநிலத்தவர் புதுச்சேரி எல்லையை கடந்து வருவது வழக்கம். தமிழக பகுதியான கண்டமங்கலம் புதுச்சேரி யின் புறநகர்ப் பகுதியான வில்லியனூர், மத கடிப்பட்டு இடையில் அமைந்துள்ளது. இதே போல தமிழகத்தின் கண்டமங்கலம் பகுதியான சித்தலம்பட்டு புதுச்சேரி பகுதியான திருக்கனூர் கிராமங்கள் பின்னிப் பிணைந்துள்ளது. மேலும் புதுச்சேரி பகுதியான கரையான் புத்தூர் கிராமத்தை சுற்றிலும் தமிழக பகுதியில் அமைந்துள்ளது. புதுச்சேரி மாநில பகுதியான மதகடிப் பட்டு, திருக்கனூர், கரையான்புத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு புதுச்சேரி மாநில போலீசார் உட்பட அனைத்து அதிகாரிகளும் தமிழக பகுதிகளை கடந்துதான் செல்ல வேண்டும்.
இதேபோல கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்களது அத்தியாவசிய பணிக ளுக்கு செல்ல புதுச்சேரி பகுதிகளை கடந்து தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. முக்கியமாக புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வட மங்கலத்தில் தொடங்கி மதகடிப்பட்டு வரை இடையிடையே தமிழக பகுதி களும் புதுச்சேரி பகுதிகளும் மாறி மாறி வரு கின்றன. கண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் புதுச்சேரி மாநில பகுதி கடந்துதான் அரசு மற்றும் தனியார் வேலைகளுக்கு செல்ல வேண்டும். அதேபோல தமிழகப் பகுதியான விழுப்புரம் கடலூர் போன்ற பகுதிகளிலிருந்து தமிழக பகுதிக்கே அரசு ஊழியர்கள் தங்களது பணி யிடங்களுக்கு வரவேண்டுமென்றால் புதுச்சேரி எல்லையை கடந்து தான் வரவேண்டும்.
இந்நிலையில், கடந்த 50 நாட்களாக கொரோனா நோய் தாக்கத்தால் இரு மாநில எல்லைகளிலும் போக்குவரத்து தடை செய்யப் பட்டுள்ளது. இருந்தபோதிலும் இருமாநில எல்லைகளையும் இரு சக்கர வாகனங்களில் சென்று தங்களது அன்றாட பணிகளை செய்து வந்தனர். இப்படிப்பட்ட சூழலில் கடந்த 5 ஆம் தேதி முதல் புதுச்சேரி போலீசார் தமிழகப் பகுதி யில் எல்.ஆர். பாளையம் ஊராட்சி எல்லையில் (புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு) தடுப்புகளை ஏற்படுத்தி விழுப்புரம் மாவட்ட பகுதியில் இருந்து கண்டமங்கலம் ஒன்றிய பகுதிகளுக்கு அத்தியா வசிய பணிக்கு வரும் அரசு ஊழியர்களையும் மின்சார வாரிய ஊழியர்களையும் தடுத்து திருப்பி அனுப்பும் அவலம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி போலீசார் மற்றும் அரசியலால் தமிழக பகுதியான கண்ட முகவரி யில் நடை பெறும் அனைத்து அரசு பணிகளும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மின்சார வாரிய ஊழியர்கள் பணியிடங் களுக்கு வரமுடியாத காரணத்தால் மின்சாரம் தடைபடும் நிலை ஏற்பட்டு வருகிறது.
கடந்த 4 ஆம் தேதி இரவு விழுப்புரத்தி லிருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மதகடிப்பட்டு தனியார் மருத்துவ மனைக்கு கொண்டுவந்த குழந்தையை எல்லை யில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியதால் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு உயிருக்கு போராடியது. இதே போன்று தொடர் சம்பவங்கள் நடக்கி றது. இதனால் தமிழக பகுதி அவசர நோயாளி கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தொடர்ந்து இதுபோன்ற செயலில் புதுச்சேரி அரசும், காவல் துறையினரும் ஈடுபட்டு வருவ தால் தமிழக பகுதி மக்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இனி வரும் காலங்களில் தமிழக பகுதிக்குள் வரும் புதுச்சேரி மாநில அதிகாரிகளின் வாகனங்களை தடுத்து நிறுத்த அரசியல் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் முடிவு செய்துள்ளதால் இப்பகுதி யில் பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஊரடங்கு மே 17 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து உள்ளதால் உடனடியாக தமிழகம் மற்றும் புதுச்சேரி என இருமாநில அதிகாரிக ளும் தலை யிட்டு இதற்கு ஒரு நல்ல முடிவு ஏற்படுத்த வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்ற னர்.