கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அம்மாசத்திரத்தைச் சேர்ந்த எம்.கே.தசரதன் (வயது 92) என்பவர் வயது முதிர்வு காரணமாக சென்னையில் காலமானார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளரான எம்.கே. தசரதன், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள்-பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினரான வாசுதேவன் அவர்களின் தந்தை ஆவார். அன்னாரது மறைவுச் செய்தி அறிந்துமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாற்றுத்திறனாளிகள் சங்கம், சிஐடியு சங்கங்களைச் சேர்ந்த தோழர்கள் இரங்கல் தெரிவித்தனர். தசரதனுக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்.