tamilnadu

img

தோழர் கே.தேவராஜ் காலமானார்

மதுரை, செப் 2-. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் கே.தேவராஜ் காலமானார். கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயற்குழு உறுப் பினராக பொறுப்புவகித்த உசிலம்பட்டி கே.தேவராஜ், உடல்நலக்குறைவின் காரண மாக சிவகாசி ஹவுசிங் போர்டு காலனியில் சிலகாலமாக தங்கி யிருந்து சிகிச்சை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் ஞாயிறன்று இரவு கால மானார். அவருக்கு வயது 66. கட்சியின் முழுநேர ஊழியரான தோழர் கே.தேவராஜ் உசிலம்பட்டி தாலுகா செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பி னர், மதுரை மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை ஏற்று திறம்பட பணியாற்றி யுள்ளார். குறிப்பாக உசிலம்பட்டி தாலுகா வில் கட்சியைக் கட்டுவதில் முக்கியப் பங்காற்றியவர்.

மாவட்டம் முழுவதும் விவசாயிகள் சங்கத்தை கட்டுவதிலும் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதிலும் முக்கியப் பங்காற்றியவர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொறுப்பு வகித்த நிலையிலும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் கோரிக்கைகளுக்காகவும் அவர்கள் நடத்திய போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். அரசுப் பணியில் சேருவதற்கான வாய்ப்பு கிடைத்தபோதும் அதை மறுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டவர் தோழர் கே.தேவராஜ். அவரது மறைவு செய்தி யறிந்ததும் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், விருதுநகர் மாவட்டச் செயலாளர் கே.அர்ச்சுனன், தேனி மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன்,  மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் அ.விஜயமுருகன் உட்பட ஏராளமானோர் தேவராஜ் உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி திங்களன்று காலை 11 மணியளவில்  சிவகாசியில் நடைபெற்றது. மறைந்த தோழர் தேவராஜூக்கு மனைவி வளர்மதி, மகன் ஜூலியஸ் பியூசிக்,  மகள் ஜென்னி ஆகியோர் உள்ளனர்.

அஞ்சலி கூட்டம்

மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் ஏ.லாசர் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.

தலைவர்கள் இரங்கல்

கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், மதுக்கூர் இராமலிங்கம்,  மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.பெருமாள், உள்ளிட்டோர் தோழர் கே.தேவராஜ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பெ.சண்முகம் இரங்கல்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம்  விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:  தோழர் கே.தேவராஜ் அவர்கள் இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி கிடைத்தது. கடந்த இரண்டு வருட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஆண்டு அவரை மருத்துவமனையில் சென்று பார்த்தேன். எப்போதும் வெடிப்புடன் பேசும் அவர் அன்று கதறியழுதார். இவ்வளவு சீக்கிரம் படுக்கையில் விழுந்துவிட்ட ஆதங்கம் அது. குணம் பெற்று மீண்டு வருவார் என்று எதிர்பார்த்தேன்.

மதுரை மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவராக, செயலாளராக, மாநிலக்குழு உறுப்பினராக பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். விவசாயிகளுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண அதிகாரி களை தொடர்ந்து சந்தித்து வலியுறுத்துவார். விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தவறாமல் பங்கெடுத்து மாவட்ட முழுவதுமுள்ள விவசாய பிரச்சனைகளை அக்கூட்டத்தில் எழுப்புவார். சுமார் 40 ஆண்டுகாலம் மக்களுக்கான பணியில் தன்னை  அர்ப்பணித்துக் கொண்டவர். தோழர். தேவராஜ் அவர்கள் மறைவிற்கு செவ் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து தவிக்கும் அவருடைய துணைவியார், மகன், மகள் மற்றும் உறவினர்களுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.