tamilnadu

img

ரப்பர் தொழிலாளர் ஊதிய உயர்வுக்கு குழு: அமைச்சர்

சென்னை, மார்ச் 12- குமரி மாவட்டத்தில் தொடர் வேலை  நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  ரப்பர் கழக தொழிலாளர்களின் பிரச்சனை  குறித்து நடந்த விவாதத்திற்கு விளக்கம்  அளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனி வாசன்,“ உலகளாவிய பொருளாதார மந்த நிலையால் அரசு ரப்பர் கழகம் நட்டத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையிலும் தொழிலாளர்கள் நலன் கருதி அடிப்படை ஊதியம் நாள் ஒன்றுக்கு 282 ரூபாயிலிருந்து 303 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது” என்றார். 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரைக்கும் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு குறித்து அரசு சார்பில் பல கட்டமாக பேச்சுவார்த்தை நடை பெற்று இடைக்கால நிவாரணமாக ரூ.23  ஊதிய உயர்வு வழங்க இடைக்கால ஒப்பந்தம் ஏற்பட்டது. மேலும், இதர கோரிக்கைகள் மீது அரசின் இறுதி தீர்வு பின்னர் ஏற்படுத்தப்படும் என்று இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன்படி அரசு தரப்பு கருத்துருவு நிர்வா கத்திற்கு அனுப்பப்பட்டது. இதை  பல முறை பரிசீலித்து இடைக்காலமாக வழங்கிய ஊதிய உயர்வை இறுதிப்ப டுத்தி அரசாணை வெளியிடப்பட்டது.

இதர கோரிக்கைகள் மீது இறுதி  ஒப்பந்தம் ஏற்படுத்தி நடைமுறைப்ப டுத்த தொழிலாளர் துறைக்கு நிர்வாகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், நிர்வாகம் தரப்பில் நடைமுறைப் படுத்த பல முறை முன்வந்தும் தொழிற்  சங்கம் தரப்பில் இதை ஏற்காமல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரு கிறார்கள். தற்போது காலவரையற்ற போராட்டம்  நடந்து வருகிறது. இது தொடர்பாக தொழிலாளர் துணை ஆணை யர் (சமரசம்) தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, தமிழக அர சின் ஆணையை ரத்து செய்து மீண்டும்  ரூ.17 மற்றும் ரூ. 23 என 40 ரூபாய்  வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்  ளனர். இதர பிரச்சனைகளை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளலாம். அதுவரைக்கும் போராட்டத்தை கைவிட  மாட்டோம் என்றும் தெரிவித்திருக்கி றார்கள் என்றும் ஊதிய உயர்வு குறித்து  ஒரு குழு அமைத்து அந்த குழு கொடுக்கும்  பரிந்துறையின் அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.