tamilnadu

img

கரும்பு விவசாயிகளுக்கு ஆரூரான் ஆலை ரூ. 4 கோடி பாக்கி

கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்வி எழுப்பிய  விருத்தாசலம் தொகுதி அதிமுக உறுப்பினர் கலைச்செல்  வன், “கடலூர் மாவட்டம் விருதாசலத்தில் உள்ள ஆரூ ரான் கூட்டுறவு சர்க்கரை ஆலை நட்டத்தில் இயங்கிய தால் மூடப்பட்டது. ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயி களுக்கு ஆலை நிர்வாகம் நிலுவை வைத்துள்ள ரூ.14  கோடி நிலுவை கடனை பெற்றுத்தர அரசு முன்வருமா? என்றார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் எம்.சி.சம்பத், “இந்த ஆலை விவசாயிகளுக்கு மட்டுமல்ல, வங்கிக ளுக்கும் கடன் வழங்க வேண்டியுள்ளது. ஆலை மூடப்  பட்டதால் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இருந்தாலும் விவசாயிகளுக்கு தரவேண்டி பாக்கித் தொகையை பெற்றுக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றார்.